தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நாகர்கோவில் சிறையில் மாற்றுத் திறனாளி அடித்துக் கொலை நீதி விசாரணை நடத்துக; குடும்பத்திற்கு அரசுப் பணி வழங்குக!

15 Jul 2026, 9:55 pm
நாகர்கோவில் சிறையில் மாற்றுத் திறனாளி அடித்துக் கொலை நீதி விசாரணை நடத்துக; குடும்பத்திற்கு அரசுப் பணி வழங்குக!

நாகர்கோவில் சிறையில் மாற்றுத் திறனாளி அடித்துக் கொலை நீதி விசாரணை நடத்துக; குடும்பத்திற்கு அரசுப் பணி வழங்குக!

நாகர்கோவில், ஜூலை 15 - நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப் பட்டிருந்த மாற்றுத் திறனாளி விசாரணை சிறை வாசி சபரிவர்மன் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை குறித்து உரிய நீதிவிசாரணை நடத்த வேண்டும் எனவும், அவரது குடும்பத் திற்குத் தகுந்த நிவாரணமும், சபரிவர்மன் மனைவிக்கு அரசுப்பணியும் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சங்கமும் வலியுறுத்தி யுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பு அருகே ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி சபரிவர்மன் (33), கடந்த ஜூலை 9 அன்று தென்தாமரைகுளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, ஜூலை 10 அன்று சிறை யில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், ஜூலை 13 அன்று காலை அவர் சிறையிலேயே சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்துச் சிபிஎம் மாவட்டச் செயலா ளர் என்.எஸ். கண்ணன் விடுத்துள்ள அறிக்கை யில், காவல்துறையினர் கேட்ட ரூ. 25 ஆயிரம் மாமூல் லஞ்சத்தை வழங்க மறுத்ததால் சபரி வர்மன் பழிவாங்கப்பட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற உடற்கூராய்வில், சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாகச் சிறை வார்டன்கள் 3 பேர், கைதிகள் 8 பேர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ச

டலத்தைப் பெற மறுத்துப் போராட்டம் படுகொலையைக் கண்டித்துத் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை முன்பு 3-ஆவது நாளாகப் போராட்டம் நடை பெற்றது.

மாவட்டச் செயலாளர் ஆர். வில்சன் தலைமை தாங்கிய இப்போராட்டத்தில், மாநிலத் துணைத் தலைவர் சி. முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மேலும், சபரிவர்மனின் மனைவி ஆனந்த வல்லி, தன் கணவரிடமிருந்து காவல்துறையினர் பறிமுதல் செய்த கைப்பேசியை ஒப்படைக்க வேண்டும் எனக் கோரியுள்ளார். அலைபேசியில் போலீசாருக்கு மாமூல் கொடுத்த ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலைவர்கள் நேரில் ஆறுதல் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பத்மநாப புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர். செல்ல சுவாமி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் என்.எஸ். கண்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் சபரிவர்மன் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளனர். கணினி பட்டதாரியான சபரிவர்மனின் மனைவிக்கு உடனடியாக நிரந்தர அரசுப்பணி வழங்கி, வாழ்வாதாரத்தை உறுதி செய்யத் தமிழக அரசு முன்வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் வலி யுறுத்தியுள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.