ஜூன் 1 முதல் நாகர்கோவிலில் குரூப் தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்பு
27 May 2026, 10:43 pm
<p><strong>ஜூன் 1 முதல் நாகர்கோவிலில் குரூப் தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்பு</strong></p><p>நாகர்கோவில்,மே 27- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள ஆண்டு திட்ட நிரலில் 2026 ஆம் ஆண்டு குரூப் I தேர்வுக்கான அறிவிப்பு 23.06.2026 அன்று வெளியிடப்பட்டு முதல்நிலை தேர்வு 06.09.2026 அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குரூப் II தேர்வு அக்டோபர் மாதமும் குரூப் IV தேர்வு டிசம்பர் மாதமும் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகும் பொருட்டு நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப் I, குரூப் II/IIA மற்றும் குரூப் IV ஆகிய தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்பு 01.06.2026 (திங்கட்கிழமை) அன்று தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு திறன் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு ஸ்மார்ட் போர்டு (Smart Board) வசதியுடன் நடத்தப்படுகிறது. பாடத்திட்டத்தின் அடிப்படையில் மாதிரி தேர்வுகளும் மற்றும் மாநில அளவிலான முழு மாதிரி தேர்வுகளும் அடங்கிய தேர்வு தொடர் (TEST SERIES) நடத்தப்படவுள்ளது. மேலும் இத்தேர்வுக்கு தயாராக தேவையான அனைத்து புத்தகங்களும் தன்னார்வ பயிலும் வட்ட நூலகத்தில் உள்ளன. மாணவர்கள் சுயமாக போட்டித்தேர்வுக்கு தயாராகும் வகையில் ஸ்டடி ஹால் (Study Hall) வசதியும் உள்ளது. பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான மென் பாடகுறிப்புகள் https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணையத்தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் போட்டித்தேர்வுகள் குறித்து தகவல்களை பெற EMPLOYMENT OFFICE NAGERCOIL என்ற Telegram Channel-இல் இணையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் 01.06.2026 (திங்கட்கிழமை) அன்று நேரில் வருமாறு கேட்டுகொள்ளப்படுகிறது. TNPSC போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.</p>
