தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனம் சீல் வைப்பு டெங்கு தடுப்பு ஆய்வில் ஆட்சியர் நடவடிக்கை

30 Sept 2026, 9:51 pm
சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாத  நிறுவனம் சீல் வைப்பு டெங்கு தடுப்பு ஆய்வில் ஆட்சியர் நடவடிக்கை
<p><strong>சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனம் சீல் வைப்பு டெங்கு தடுப்பு ஆய்வில் ஆட்சியர் நடவடிக்கை </strong></p><p>நாகர்கோவில், செப்.30-கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர்மு.பிரதாப் செப்டம்பர் 30 புதனன்று கோணம் சிட்கோ தொழிற்பேட்டை மற்றும் இராணித்தோட்டம் அரசுபோக்குவரத்து கழக வளாகம் ஆய்வு மேற்கொண்டார்.</p><p>பின்னர் ஆட்சியர் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்ஒருபகுதியாக, நாகர்கோவில் கோணம் சிட்கோ தொழிற்பேட்டையில் இன்று நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு கையுறை தயாரிப்பு நிறுவனம், மீன்வலை பின்னும் நிறுவனம் மற்றும் நான்கு சக்கரவாகனங்கள் சார்ந்த நிறுவனங்கள் உட்பட ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில்ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.தொழிற்சாலை வளாகங்களில் கொசுக்கள் பெருக்கத்திற்கு காரணமான தேவையற்ற பொருட்களை உடனடியாகஅப்புறப்படுத்த கம்பெனி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாதஒரு நிறுவனத்தின் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, மற்றொருநிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, இராணித்தோட்டம் அரசுபோக்குவரத்து கழக வளாகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு உள்ள பழைய டயர்கள் மற்றும் பயன்படுத்தப்படாத உதிரிபாகங்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு பரவ வாய்ப்புள்ள இடங்களைக் கண்டறிந்து, கொசுப்புழுமற்றும் முதிர் கொசு ஒழிப்பு பணிகளைத் தீவிரப்படுத்தவும், புகை மருந்து அடிக்கவும், வடிகால்களில் நீர்தேங்காமல் சீராகச் செல்ல சுத்தப்படுத்தும் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் நாகர்கோவில் மாநகராட்சிஆணையர் மற்றும் சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர்தெரிவித்தார்.இந்த ஆய்வில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா மற்றும் துறை அலுவலர்கள், பணியாளர்கள்உட்பட பலர் கலந்து கொண்டனர். </p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.