நாகர்கோவில்-குளச்சல் தடம் பேருந்தை இருமுறை இயக்கிடுக! சிபிஎம் குளச்சல் வட்டாரக் குழு வலியுறுத்தல்
22 Jul 2026, 10:14 pm
<p><strong>நாகர்கோவில்-குளச்சல் தடம் பேருந்தை இருமுறை இயக்கிடுக! சிபிஎம் குளச்சல் வட்டாரக் குழு வலியுறுத்தல்</strong></p><p>நாகர்கோவில், ஜூலை 22 - நாகர்கோவில் குளச்சல் தடம் பேருந்தை இரண்டு முறை இயக்க வேண்டும் என சிபிஎம் குளச்சல் மற்றும் குறுந்தகோடு வட்டாரக் குழு சார்பில் குளச்சல் பணிமனை மேலாளரிடம் வலியுறுத்தப்பட்டது. சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் உஷா பாசி தலைமையில், வட்டாரச் செயலா ளர் பா.ராஜு, கிளைச் செயலாளர் செல்வ ராணி மற்றும் ஊர் பொதுமக்கள் கொடுத்த மனுவில், “நாகர்கோவில் -குளச்சல் தடம் பேருந்து மேற்குநெய்யூர், தேம்பிறவிளை கல்லுக்கூட்டம் வழியாக தினமும் இரண்டு முறை வந்து சென்றது. எனவே, இப்பேருந்து மீண்டும் இரண்டு முறை வந்து செல்ல வேண்டும். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திங்கள்நகர் பணிமனையில் இருந்து இயங்கும் நாகர்கோவில்-குளச்சல் தடம் எண்.5 மகளிர் விடியல் பேருந்து, மேற்கு நெய்யூர், தேம்பிறவிளை, கல்லுக்கூட்டம் வழியாக தினமும் காலை 12 மணிக்கு குளச்சல், 12.30 மணிக்கு நாகர்கோவில், மாலை 2.45 மணிக்கு குளச்சல், 3.30 மணிக்கு நாகர்கோவில் என இரண்டு முறை மேற்படி கிராமங்களுக்கு வந்து சென்றது. இப்போது மேற்படி தடம் எண்.5 மகளிர் விடியல் பேருந்து மேல் குறிப்பிட்டுள்ள கிராமங் களுக்கு ஒரு முறை மட்டும்தான் வந்து செல்கிறது அதுவும் சரியான நேரத்திற்கு வரு வதில்லை. இதனால் பயணிகள் மிகுந்த சிர மத்திற்கு உள்ளாகின்றனர். எனவே முன்னர் இயக்கியது போல் இரண்டு முறை குறித்த நேரத்தில் இயக்கிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவித்திருந்தனர்.</p>
