நாகர்கோவிலில் நடந்த முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப்
5 Oct 2026, 9:24 pm
<p>நாகர்கோவிலில் நடந்த முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் மாற்றுத் திறனாளிகள் பிரிவில் அருண் அஜித் நூறு மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்று முதலிடம் பெற்றார். மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் பரிசு வழங்கினர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் குலசேகரம் கிளைச் செயலாளரான அவருக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.வில்சன் வாழ்த்து தெரிவித்தார்.</p>
