தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஓட்டை உடைசல் பேருந்துகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுக! நாகர்கோவில் பணிமனையில் ‘கூண்டு கட்டும் பிரிவை’ மீண்டும் இயக்குக!

28 May 2026, 10:03 pm
ஓட்டை உடைசல் பேருந்துகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுக! நாகர்கோவில் பணிமனையில் ‘கூண்டு கட்டும் பிரிவை’ மீண்டும் இயக்குக!

ஓட்டை உடைசல் பேருந்துகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுக! நாகர்கோவில் பணிமனையில் ‘கூண்டு கட்டும் பிரிவை’ மீண்டும் இயக்குக!

கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நாகர் கோவில் மண்டல அரசுப் போக்குவரத்துக்கழகத்தில், கடந்த காலங்களில் மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வந்த கூண்டு கட்டும் பிரிவை (Body Building Unit) மீண்டும் செயல்பட வைக்க வேண்டியது காலத்தின் கட்டாய மாகும்.

தமிழக அரசு உடனடியாக இப்பிரிவை மீண்டும் செயல்படுத்து வதன் வழியாக, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 250 தொழில்நுட்பப் பணி யாளர்களுக்குப் புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்; தற்போதைய ஓட்டை உடைசல் பேருந்துகளின் அவல நிலைக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

வரலாற்றுப் பின்னணியும் தற்போதைய நிலையும் நாகர்கோவில் மண்டல அரசுப் போக்குவரத்துக்கழகம் நீண்டதொரு பாரம்பரியத்தைக் கொண்டது.

கடந்த 1974-ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலைத் தலைமையிடமாகக் கொண்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திலிருந்து பிரிக்கப்பட்டு, ‘கட்டபொம்மன் போக்குவரத்துக் கழகம்’ என இது செயல்பட்டு வந்தது.

பின்னர் 1983-ஆம் ஆண்டு ‘நேசமணி போக்குவரத்துக் கழகம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 2004 முதல் தற்போதைய அமைப்பில் திருநெல்வேலி கோட்டத் தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

இம்மண்டலத்தின் கீழ் நாகர்கோ வில் ராணித்தோட்டம்-1, 2, 3, விவேகானந்தபுரம், கன்னியாகுமரி, குளச்சல், திங்கள்சந்தை, செட்டி குளம், குழித்துறை-1, 2, திருவட்டார் என மொத்தம் 12 பணிமனைகள் மிகப்பரந்த அளவில் செயல்பட்டு வருகின்றன.

இந்த மண்டலத்தில் 1,856 ஓட்டுநர்களும், 292 தொ ழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களும் இரவு பகலாக உழைத்து வருகிறோம்.

காலிப்பணியிடங்களும் அதிகரித்துவரும் பணிச்சுமையும் இத்தனை பணிமனைகள் சிறப்பாக இயங்கினாலும், தற்போது நிலவி வரும் கடுமையான காலிப் பணியிடங்கள் தொழிலாளர்களைக் கடும் அவதிக்குள்ளாக்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி ஓட்டுநர் பணியிடங்கள்-60, நடத்துநர் பணியிடங்கள்-341, தொழில்நுட்பப் பணியிடங்கள்-128 மற்றும் அலுவலகப் பணியிடங்கள்-51 எனப் பெருமளவிலான பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன.

இதனால் நிலவி வரும் கடும் பணிச்சுமை, தொழிலாளர்க ளின் அன்றாடப் பணியைப் பெரிதும் பாதித்துள்ளது.

உலகப் புகழ்பெற்ற நமது ‘பாடி பில்டிங்’ பெருமை கன்னியாகுமரி மாவட்டத்தில் 452 நகரப் பேருந்துகள் மற்றும் ஏரா ளமான புறநகர்ப் பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு, பல்லாயிரக் கணக்கான பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.

அண்டை மாநிலமான கேரளாவிற்கும் இங்கிருந்து அதிகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இத்தனை சிறப்புகள் வாய்ந்த நமது பணிமனைதான், ஒரு காலத்தில் பேருந்துகளுக்குக் கூண்டு கட்டுவதில் ஒட்டுமொத்தத் தமிழகத்திலேயே முதலிடம் வகித்தது என்பது இன்று பலரும் அறியாத உண்மை.

நமது மாவட்டத்தில் கிடைக்கும் மிகத் தரமான மரங்கள் மற்றும் நமது ஊழியர்களின் தேர்ந்த தொ ழில்நுட்பக் கைவண்ணத்தால்தான் இங்கு கட்டப்பட்ட கூண்டுகள் மிகத் தரம் வாய்ந்தவையாக அமைந்தன.

ஒரு காலத்தில் இலங்கை அரசு, கேரளா அரசு மற்றும் முன்னணி தனியார் நிறுவனங்கள் கூடத் தங்க ளின் புதிய ‘சேசிஸ்’களை (Chassis) நாகர்கோவிலுக்குக் கொண்டு வந்து கூண்டு கட்டி எடுத்துச் சென்ற வரலாறு உண்டு.

நிறுத்தப்பட்ட பிரிவும் கரூர் நிறுவனங்களின் ஆதிக்கமும் கடந்த 1962-இல் காமராஜர் முதலமைச்சராகவும், ஆர். வெங்கட் ராமன் போக்குவரத்து அமைச்சராக வும் இருந்தபோது இந்தத் கூண்டு கட்டும் பிரிவு மிக கம்பீரமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.

ராணித் தோட்டம் பணிமனை மற்றும் மீனாட்சிபுரத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக்கழகப் பணிமனை களில் இப்பணி மிகச்சிறப்பாக நடை பெற்றது.

ஆனால், 1990-களுக்குப் பிறகு புகுத்தப்பட்ட ஒப்பந்த (Contract) முறையினாலும், ஆட்சியாளர்களின் அலட்சியத்தினாலும் இப்பிரிவு மூடப்பட்டு, இங்கிருந்த எந்திரங்களும் அப்புறப்படுத்தப்பட்டன.

இதனால் ஏராளமான தொழிலாளர்கள் தங்க ளின் வாழ்வாதாரத்தை இழந்தனர்.

தற்போது புதிய சேசிஸ்கள் அனைத்தும் கரூர் போன்ற பிற மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கு கூண்டு கட்டப்பட்டு மீண்டும் இங்குக் கொண்டு வரப்படுகிறது.

சமீபகாலமாகப் புதிய பேருந்துகள் ஒதுக்கீடு மிகக் குறைவாக உள்ள தால், பழைய பேருந்துகளின் சேசிஸ்களையே (Chassis) கொண்டு மீண்டும் மீண்டும் பாடி கட்டி, ஆபத்தான முறையிலேயே பயணி கள் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.

தனியார் கூண்டுகளின் தரம் குறைவும் கூடுதல் நிதிச்சுமையும் நமது கூண்டு கட்டும் பிரிவு செயல்பட்ட போது, பேருந்துகள் ஓட்டை உடைசல்கள் இன்றி, மலைப் பிரதேசம் மற்றும் கடற்கரைப் பகுதி களில் இயக்க ஏதுவாகத் தரமாக இருந்தன.

காற்றோட்டம், டீசல் சிக்கனம், விபத்துக் குறைவு மற்றும் தொழிலாளர்களின் பணிச்சூழலுக்கு உகந்ததாக அவை அமைந்தன.

ஆனால், இப்போது கரூரில் தனி யார் நிறுவனங்கள் மூலம் கூண்டு கட்டி வரப்படும் பேருந்துகள் அந்த ளவிற்குத் தரமாக இருப்பதில்லை.

முன்பு நமது பணிமனையில் வெளி யூரிலிருந்து வரும் கம்பி, பைப் போன்றவற்றின் தரம் குறைவாக இருந்தால், அவற்றை ஊழியர்கள் திருப்பி அனுப்பிய துணிச்சலான அதிகாரமிருந்தது; இன்று தனி யார்மயத்தால் அந்தத் தரம் முற்றி லும் சீரழிந்துவிட்டது.

மேலும், கரூரில் கூண்டு கட்ட ஒரு பேருந்துக்கு 8 லட்சம் ரூபாய் வரை அரசு செலுத்த வேண்டியுள்ளது

. நாகர்கோவிலில் கட்டியபோது 6 லட்சம் ரூபாய் மட்டுமே செலவானது.

இதன் மூலம் ஒவ்வொரு பேருந்துக்கும் 2 லட்சம் ரூபாய் கூடுதலாகச் செலுத்த வேண்டிய நிதிச்சுமை அரசுக்கு ஏற்படுகிறது.

உரிமைக் குரல்! இழந்த தொழில்நுட்பத்தை மீண்டும் புகுத்தி, நாகர்கோவில் மண்டலப் போக்குவரத்துக்கழகப் பணிமனையில் கூண்டு கட்டும் பிரிவை மீண்டும் தொடங்கினால், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 250 தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு உறுதியாகக் கிடைக்கும்.

அரசுக்கும் பேருந்து ஒன்றுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வரை மக்கள் பணம் மிச்சமாகும்.

எனவே, சாமானிய மக்கள் பாது காப்பாகப் பயணம் செய்யவும், தொழிலாளர்களின் வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தவும், நிலு வையில் உள்ள காலிப்பணியிடங்க ளை உடனடியாக நிரப்பவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.