செவிலியர்கள் குரல் முழக்கப் போராட்டம்
8 Aug 2026, 10:54 pm

செவிலியர்கள் குரல் முழக்கப் போராட்டம்

நாகப்பட்டினம், ஆக. 8- தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க நாகப்பட்டினம் மாவட்டம் சார்பில் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குரல் முழக்கப் போராட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் ப.

ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது.

செவிலியர் மேம்பாட்டு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜெயபாரதி விளக்க உரையாற்றினார். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் அ.தி. அன்பழகன் சிறப்புரையாற்றினார்.

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். எம்.ஆர்.பி. வழியாக 2015 இல் இருந்து நியமிக்கப்பட்ட செவிலியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். நோயாளிகள் எண்ணிக்கைக்கேற்ப செவிலியர் பணியிடங்களை உருவாக்குவதை தவிர்த்து, பணியிட நிரவல் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. செயற்குழு உறுப்பினர் பா.சரஸ்வதி நன்றியுரையாற்றினார்.