சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா
16 Jun 2026, 11:02 pm
<p><strong>சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா</strong></p><p>நாகப்பட்டினம், ஜுன் 16- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நாகப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா வின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா நாகப்பட்டினத்தில் நடைபெற்றது. திமுக மாவட்டச் செயலாளர் என். கௌதமன் தலைமையேற்று அலுவ லகத்தை திறந்து வைத்தார். நாகப்பட்டினம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, திமுக, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட தோழமை கட்சிகளின் நிர்வாகிகள், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் சு.வளர்மாலா, மாவட்டச் செயலாளர் த. ஸ்ரீதர் உள்ளிட்ட வட்ட, மாவட்ட நிர்வாகிகள், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் அ.தி. அன்பழகன், தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் முகமது ஆரிப் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகளும் திறப்புவிழாவில் பங்கேற்றனர்.</p>
