தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நாகப்பட்டினம், மே 10- தமிழ்நாட்டின் பல இடங்களில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த மழை அடுத்த ஒரு

10 May 2026, 10:05 pm
நாகப்பட்டினம், மே 10-  தமிழ்நாட்டின் பல இடங்களில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த மழை அடுத்த ஒரு

நாகப்பட்டினம், மே 10- தமிழ்நாட்டின் பல இடங்களில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த மழை அடுத்த ஒரு

நாகப்பட்டினம், மே 10- தமிழ்நாட்டின் பல இடங்களில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த மழை அடுத்த ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் என எச்சரித்துள்ளது.

இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் விடுத்துள்ள அறிக்கையில்,”மழை, புயல், வெள்ளம், இடி, மின்னல் போன்ற இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவசரக்கால கட்டுப்பாட்டு மைய தொலைபேசி எண் - 04365-1077, கட்டணமில்லா தொலைபேசி எண் - 1800-233-4233 மற்றும் வாட்ஸ் ஆப் எண் - 8110005558 ஆகியவை இயங்கி வருகிறது.

இக்கட்டுப்பாட்டு மையத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.

எனவே, பொதுமக்கள் இயற்கை பேரிடர் தொடர்பான கோரிக்கைகள் இருப்பின் உடனடியாக மேற்படி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் 210 மி.மீ மழை திருச்சி மாவட்டத்தில் கடந்த மே 4ஆம் தேதி முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

குறிப்பாக சனிக்கிழமை மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்தது.

காலை பெய்யத் தொடங்கிய மழை சுமார் 3 மணி நேரம் நீடித்ததால் வெயிலின் தாக்கம் மறைந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது.

சனிக்கிழமை பெய்த மழையில் அதிகபட்சமாக தென்பரநாடு பகுதியில் 41 மில்லி மீட்டர் மழை பதிவானது.

மாவட்டத்தின் இதர பகுதிகளான முசிறி 9.2, தா.பேட்டை 5, நவலூர் கொட்டப்பட்டு 5, துவாக்குடி 13.1, கொப்பம்பட்டி 5, பொன்மலை 22.4, திருச்சி விமான நிலையம் 28.7, திருச்சி சந்திப்பு 15, திருச்சி டவுன் 19 என மாவட்டம் முழுவதும் 210 மில்லி மீட்டர் மழை பதிவானது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.