உர விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சார்பில் நாகப்பட்டினம் அவரித்திடலில்
27 May 2026, 9:20 pm
<p>உர விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சார்பில் நாகப்பட்டினம் அவரித்திடலில் செவ்வாயன்று, சிபிஎம் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.சித்தார்த்தன், சிபிஐ விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.சரபோஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்டப் பொருளாளர் எஸ்.பாண்டியன், மாவட்டக் குழு உறுப்பினர் பி.சந்திரன் மற்றும் ஒன்றியச் செயலாளர்கள், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கே.பாபுஜி, மாவட்ட துணைச் செயலாளர் ஏ.ராமலிங்கம், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.தங்கையன், நாகப்பட்டினம் ஒன்றியச் செயலாளர் எம்.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
