முந்தய பக்கம்

மேகவெடிப்பில் இருந்து நூலிழையில் தப்பிய நாகாலாந்தின் மோன் மாவட்டம்

21 Jul 2026, 8:55 pm
மேகவெடிப்பில் இருந்து நூலிழையில் தப்பிய நாகாலாந்தின் மோன் மாவட்டம்
<p><strong>மேகவெடிப்பில் இருந்து நூலிழையில் தப்பிய நாகாலாந்தின் மோன் மாவட்டம்</strong> </p><p>நாகாலாந்து மாநிலத்தின் 2ஆவது பெரிய மாவட்டமாக இருப்பது மோன் மாவட் டம் ஆகும். இது அசாம் மாநிலத்தின் எல்லை யில் உள்ளது. மோன் மாவட்ட மலைத்தொட ருக்கு அருகே, அதாவது பின்புறமாக திங்க ளன்று மேகவெடிப்பு ஏற்பட்டதால்தான், நாகா லாந்தில் இருந்து அசாமின் மேல் பகுதி நோக் கிப் பாயும் நதிகளில் திடீரென நீர்ப்பெருக்கு ஏற்பட்டது. இந்தத் திடீர் வெள்ளம் காரணமா கவே சிவசாகர், சாரைதேவ், ஜோர்ஹாட் உள்ளிட்ட அசாமின் பல மாவட்டங்கள் கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மலைத்தொட ருக்கு முன்புறமாக மேகவெடிப்பு ஏற்பட்டு இருந்தால், மோன் மாவட்டம் உருக்குலைந்து இருக்கும். மலை அடிவாரத்தில்தான் மோன் மாவட்ட தலைநகரின் ஆயிரக்கணக்கான வீடு கள், மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள் உள்ளன. நல்வாய்ப்பாக மேகவெடிப்பு குவி யும் இடம் (மழை பொழியும் இடம்) மலைத் தொடருக்கு முன்புறமாக மையம் கொள்ள வில்லை. அவ்வாறு மையம் கொண்டிருந் தால், நாகாலாந்தின் மோன் மாவட்டத்தின் நிலைமை மோசமாகி இருக்கும்.</p>
Share
FacebookXWhatsAppTelegram