தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பாஜக கூட்டணி ஆளும் நாகாலாந்தில் அதிர்ச்சி கள்ளச்சாராயம் குடித்து 19 பேர் பலி!

26 Sept 2026, 11:30 pm
பாஜக கூட்டணி ஆளும் நாகாலாந்தில் அதிர்ச்சி கள்ளச்சாராயம் குடித்து 19 பேர் பலி!

பாஜக கூட்டணி ஆளும் நாகாலாந்தில் அதிர்ச்சி கள்ளச்சாராயம் குடித்து 19 பேர் பலி!

மொகோக்சுங்வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் 1990ஆம் ஆண்டு முதல் 36 ஆண்டுகளாகத் தீவிர மதுவிலக்கு அமலில் உள்ளது.

இந்நிலையில், நாகாலாந்தின் மொகோக்சுங் மற்றும் துயென்சாங் ஆகிய மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து, கடந்த 48 மணி நேரத்தில் அடுத்தடுத்து 19 பேர்உயிரிழந்த அதிர்ச்சிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மொகோக்சுங் மாவட்டத்தில் 8 பேரும், துயென்சாங் மாவட்டத்தில் 11 பேரும்உயிரிழந்துள்ளனர்.

இந்த உயிரிழப்புகளைத் தொடர்ந்து, அம்மாநிலக் காவல்துறையினர் பல இடங்க

ளில் சோதனைகளை நடத்தி 19 பேரைக் கைது செய்ததுடன், சுமார் 3,000 மதுப்பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், அடையாளம் தெரியாத, லேபிள் இல்லாத அல்லது சந்தேகத்திற்குரிய கள்ளச்சாராயத்தைக் குடிப்பதைத் தவிர்க்குமாறும்; மது அருந்திய பிறகு மயக்கம், பார்வைக்கோளாறு, மூச்சுத் திணறல் அல்லது சுயநினைவின்மை போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவச் சிகிச்சையைப் பெற வேண்டும் என்றும் நாகாலாந்துகாவல்துறை வலியுறுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.