முந்தய பக்கம்

நாகாலந்தில் கள்ளச்சாராயம் குடித்து 19 பேர் உயிரிழப்பு

yesterday
நாகாலந்தில் கள்ளச்சாராயம் குடித்து 19 பேர் உயிரிழப்பு

நாகாலாந்தில் கள்ளச்சாராயம் குடித்து கடந்த 2 நாட்களில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாகாலாந்தில் பூரண மதுவிலக்கு கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ள நிலையில், துவன்சங் மாவட்டத்தில் 11 பேரும், மொகோக்சுங் மாவட்டத்தில் 8 பேரும் கள்ளச்சாராயம் குடித்து பிறகு உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 2 நாட்களில் அம்மாநிலத்தில் மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஐ. பங்லாங் சாங் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் காவல் துறையினர் நடத்திய தீவிர சோதனையில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 3,000 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram