தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மும்மொழிக் கொள்கை விலக்கு கோரி ஒன்றிய அமைச்சருக்கு கடிதம்!

20 Jun 2026, 9:41 pm
மும்மொழிக் கொள்கை விலக்கு கோரி ஒன்றிய அமைச்சருக்கு கடிதம்!

மும்மொழிக் கொள்கை விலக்கு கோரி ஒன்றிய அமைச்சருக்கு கடிதம்!

நாகாலாந்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்து வதில் சிக்கல் உள்ளது. எனவே சிறப்பு மொழி விலக்கு அல்லது நெகிழ்வான கட்டமைப்பை வழங்க வேண்டும் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு அம்மாநில சிபிஎஸ்இ பள்ளி முதல் வர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

நாகாலாந்தின் தனித்துவமான சமூக-மொழிச் சூழலைக் கருத்தில் கொள்ளும்போது, மும்மொழிக்கொள் கையை அமல்படுத்துவதில் பெரும் சவால்கள் இருப்பதாக அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். இந்தியாவின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் வடகிழக்கு பகுதி முற்றி லும் மாறுபட்டது. எழுத்து வடிவமோ அல்லது இலக்கணமோ இல்லாத பல மொழிகள் நாகாலாந்தில் தொடர்பு மொழியாக உள்ளன.

நாகாலாந்து மாணவர்கள் முதன்மை யாக ஆங்கிலத்தில்தான் படிக்கிறார் கள். ஓரளவுக்கு இந்தியும் படிக்கிறார்கள். இருப்பினும், அவர்கள் இந்தியைப் புரிந்துகொள்ள மிகவும் சிரமப்படு கிறார்கள். அதனால், பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற வெளிநாட்டு மொழிகளைப் படிக்க விரும்புகிறார்கள். ஒன்றாம் அல்லது இரண்டாம் வகுப்பில் இருந்தே பிரெஞ்சு, ஜெர்மன் அல்லது ஸ்பானிஷ் மொழிகளை மாணவர்கள் கற்கிறார்கள், ஏனெனில், அவற்றின் ரோமன் எழுத்து வடிவம் ஆங்கிலத்தை ஒத்திருப்ப தால் கற்பது எளிதாக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. ஏற்கெனவே ஒருமுறை கட்டாய இரண்டாம் மொழிக் கொள்கையை நாகாலாந்து அரசு கொண்டு வர முயன்றது.

ஆனால், நாகாலாந்தின் பன்முகத்தன்மை காரணமாக அதை அமல்படுத்துவது பெரும் சவாலாக மாறியது. இந்தியைக் கற்பதே ஒரு சவாலாக இருக்கும்போது, தங்களுடைய எந்த வொரு கலாச்சார சூழலும் இல்லாத சமஸ்கிருதத்தை மாணவர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் எனவும் கேள்வி கள் எழுந்துள்ளது. நாகாலாந்து மாநிலம் 17-க்கும் மேற் பட்ட முக்கிய அங்கீகரிக்கப்பட்ட பழங்கு டியின மக்களையும், பல பழங்குடியின பிரிவை சார்ந்த மக்களும் ஒற்றுமையுடன் வாழும் பகுதியாகும்.

அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான மொழி மரபை கொண்டவர்கள். இந்நிலையில் நாகாலாந்தை மொழி ரீதியாக பன்மைத்தன்மை கொண்ட பிராந் தியம் என அங்கீகரித்து, இதற்கு ஒரு சிறப்பு மொழி விலக்கு அல்லது நெகிழ் வான கட்டமைப்பை வழங்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.