முந்தய பக்கம்

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர் போராட்டம் தீர்வு காண நாகைமாலி வலியுறுத்தல்

24 Jan 2026, 3:38 pm
அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர் போராட்டம் தீர்வு காண நாகைமாலி வலியுறுத்தல்
<p><strong>அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர் போராட்டம் தீர்வு காண நாகைமாலி வலியுறுத்தல்</strong></p> <p>சென்னை, ஜன.24- &nbsp;சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆசிரியர் மற்றும் ஊழியர்களின் நீண்ட காலப் போராட்டங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்றக் குழுத் தலைவர் நாகை மாலி சட்டப்பேரவையில் அரசின் கவனத்தை ஈர்த்தார். நிதிச் சிக்கலைக் காரணம் காட்டி அரசு அலுவலகங்களுக்குப் பணிநிரவல் செய்யப்பட்ட பேராசிரியர்களுக்கான சலுகைகள் மறுக்கப்படுவதையும், ஓய்வூதி யர்களுக்கு கடந்த 14 மாதங்களாக ஓய்வூ தியம் வழங்கப்படாததையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், 15 ஆண்டு களாகப் பணிபுரியும் தற்காலிக ஊழி யர்களைப் பணி நிரந்தரம் செய்தல், ஏழாவது ஊதியக் குழு நிலுவைத் தொகையை வழங்குதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் கூட்டமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதை விவரித்தார். சிபிஎம் தலைவர் கே.பாலகிருஷ்ணன் இது குறித்து முதலமைச்சரைச் சந்தித்துப் பேசியும் இன்னும் தீர்வு காணப்படவில்லை எனக் குறிப்பிட்ட நாகைமாலி, ஜனவரி 27 முதல் அறிவிக்கப்பட்டுள்ள தொடர் உள்ளிருப்புப் போராட்டத்தால் மாண வர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழல் உள்ளதை நினைவூட்டினார். எனவே, அரசு உடனடியாகப் போராட்டக் குழுவினரை அழைத்துப் பேசி இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram