தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

25 Jan 2026, 4:16 pm
திருச்சி விரைவு செய்திகள்
<p><strong>ஆண்டிபட்டி அருகே &nbsp;10 கிலோ கஞ்சா பறிமுதல் நாகை வாலிபர் கைது </strong></p> <p>தேனி, ஜன.25- ஆண்டிபட்டி அருகே காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் 10 கிலோ கஞ்சா பிடிப்பட்டது. இது &nbsp;தொடர்பாக நாகை மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். &nbsp;ஆண்டிபட்டி அருகே அரசு மருத்துவமனை பகுதி யில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆண்டிபட்டி &nbsp;காவல் குற்றத் தடுப்பு சம்பந்தமாக ஆண்டிபட்டி காவல் &nbsp;நிலைய சார்பு ஆய்வாளர் ரஞ்ஜித் தலைமையிலான காவல்துறையினர் வெள்ளிக்கிழமை மாலை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். &nbsp;அப்போது, ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த ஒருவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால், அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அதில், விற்ப னைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 10 கிலோ 172 கிராம் &nbsp;எடையுள்ள 5 கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ. 2,50,000 ஆகும். விசாரணையில், அவர் நாகப்பட்டினம் மாவட்டம்,&zwnj; வேதாரண்யம் பகுதியை சேர்ந்த சூரியபிரகாஷ் (30) என்பது தெரியவந்தது. இவர் மீது ஏற்கனவே திருப்பூர் மற்றும் வேதாரண்யம் காவல்நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. &nbsp;சிவகாசி மார்க்கெட்டில் காய்கறி மூட்டைகளை திருடியவர் கைது சிவகாசி, ஜன.25- சிவகாசி காய்கறி சந்தையில் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காய மூட்டைகளைத் திருடிச் சென்ற வரை போலீசார் கைது செய்தனர். &nbsp;சிவகாசி மாநகராட்சியில் அண்ணா தினசரி காய்கறி சந்தை உள்ளது. இதில், சுமார் 100க்கும் மேற்பட்ட காய்கறி &nbsp;கடைகள் உள்ளன. இரவு நேரங்களில் கடைகளை மூடிச் &nbsp;செல்லும் உரிமையாளர்கள், சில காய்கறி மூட்டைகளை வெளியே வைத்து விட்டுச் செல்வது வழக்கம். இந்நிலையில், உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காய மூடைகள் அடிக்கடி திருடு போனதாக கூறப்படு கிறது. இதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன்பு, சித்தி ரைக்கனி என்பவர் கடை முன்பு அடுக்கி வைக்கப்பட்டி ருந்த உருளைக்கிழங்கு மூட்டை திருடு போனது. எனவே, அவர் சிவகாசி நகர் காவல்நிலையத்தில் புகார் &nbsp;செய்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், &nbsp;காய்கறி சந்தையில் உள்ள கண்காணிப்புக் கேமராக் &nbsp;களை ஆய்வு செய்தனர். அதில் ஒருவர் உருளைக்கிழங்கு &nbsp;மூட்டையை தோளில் சுமந்து திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் சிவகாசி அருகே நாரணாபுரம் பகுதியைச் சேர்ந்த &nbsp;கேசவன்(40) என்பது தெரியவந்தது. அவரைக் கைது &nbsp;செய்த போலீசார், சிவகாசி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்பு சிறையில் அடைத்தனர். புகையிலை விற்பனை: &nbsp;பெண் உள்பட 3 பேர் கைது போடி, ஜன.25- போடியில் சனிக்கிழமை புகையிலை பொருள்கள் விற்பனை செய்த பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது &nbsp;செய்து விசாரிக்கின்றனர். போடி நகர் காவல்நிலைய போலீசார் ரோந்து பணியில் &nbsp;ஈடுபட்டிருந்தனர். அப்போது போடி நந்தவனம் தெருவில் &nbsp;பெட்டிக்கடை ஒன்றில் சோதனை செய்தனர். இதில் போடி &nbsp;குப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார் மனைவி &nbsp;நாகலட்சுமி (38) என்பவர் புகையிலை பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதேபோல் போடி கூட்டுறவு வங்கி அருகே பெட்டிக் &nbsp;கடையில் சோதனை செய்தனர். இதில் போடி புதூரைச் சேர்ந்த அஸ்ரப் அலி (47) மற்றும் போடி பங்கஜம் பிரஸ் &nbsp;பின்புறம் 3 ஆவது தெருவை சேர்ந்த முரளி (36) ஆகி யோர் சேர்ந்து புகையிலை பொருள்களை பதுக்கி வைத்து &nbsp;விற்பனை செய்துள்ளனர். இது குறித்து போடி நகர் காவல் நிலைய போலீசார் மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்து விசா ரிக்கின்றனர். முன் விரோத தகராறில் &nbsp;12 பேர் மீது வழக்கு; 2 பேர் கைது போடி, ஜன.24- போடி அருகே முன் விரோத தகராறில் இரண்டு தரப்பை &nbsp;சேர்ந்த 12 பேர் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்த &nbsp;போலீசார் 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்த னர். போடி அருகே பெருமாள்கவுண்டன்பட்டியைச் சேர்ந்த வர் குபேந்திரன் மகன் கார்த்திக் (34). இவர் ஒரு இடத்தை &nbsp;இடைத்தரகராக இருந்து கோடாங்கிபட்டியை சேர்ந்தவ ருக்கு கிரையம் வாங்கிக் கொடுத்துள்ளார். வெளியூர்கார ருக்கு இடத்தை ஏன் வாங்கிக் கொடுக்கிறாய் என இதே &nbsp;ஊரைச் சேர்ந்த தவமணி மகன் ஆசைத்தம்பி பிரச்சனை செய்துள்ளார். இது தொடர்பாக முன் விரோதத்தில் இரண்டு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தகராறு செய்து &nbsp;தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில் &nbsp;ஆசைத் தம்பி, பாண்டியன், செல்வம், கருத்தப்பாண்டி, முகுந்தன், மதன்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த போடி தாலுகா காவல் நிலைய போலீசார் கருத்தப் &nbsp;பண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல் ஆசைதம்பி தரப்பில் பாண்டியன் கொடுத்த புகாரின்பேரில் பால்பாண்டி, கார்த்திக், ஜெயகோபால், பசும்பொன், ராஜேஸ், பிரவீன் ஆகிய 6 பேர் மீது வழக்கு &nbsp;பதிவு செய்த போலீசார் ஜெயகோபாலை கைது செய்து &nbsp;சிறையில் அடைத்தனர்.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.