தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேசிய கீதத்திற்கு முன் ‘வந்தே மாதரம்’ மோடி அரசின் உத்தரவிற்கு நாகா மாணவர் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு

22 Feb 2026, 3:26 pm
தேசிய கீதத்திற்கு முன் ‘வந்தே மாதரம்’ மோடி அரசின் உத்தரவிற்கு நாகா மாணவர் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு
<p><strong>தேசிய கீதத்திற்கு முன் &lsquo;வந்தே மாதரம்&rsquo; மோடி அரசின் உத்தரவிற்கு நாகா மாணவர் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு</strong></p> <p>கோஹிமா மேற்குவங்க சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும், அரசியல் ஆதாயத்திற்காகவும் மோடி அரசின் உள்துறை அமைச்சகம் ஜனவரி 28 அன்று ஒரு அறி விப்பை வெளியிட்டது. அதில், &ldquo;தேசிய கீதத்திற்கு (ஜன கண மன) &nbsp;முன்னால் தேசிய பாடல் (வந்தே &nbsp;மாதரம் - வங்காள கவிஞர் பங்கிம் &nbsp;சந்திர சட்டர்ஜி எழுதினார்) முத லில் பாட அல்லது ஒலிக்கப்பட வேண்டும். அரசு விழாக்கள் மற்றும் &nbsp;கல்வி நிறுவனங்களில் இதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும்&rdquo; என அமித் ஷா கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றிய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்நிலையில், வந்தே மாதரம் &nbsp;தொடர்பான மோடி அரசின் உத்த ரவுக்கு, வடகிழக்கு மாநில மாண வர் அமைப்பான நாகா மாணவர் &nbsp;கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளது. இதுதொடர்பாக நாகா மாணவர் கூட்டமைப்பு வெளி யிட்டுள்ள அறிக்கையில், &ldquo;நாகா லாந்து பள்ளி கல்வி வாரியம் தனது &nbsp;எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வந்தே மாதரம் தொடர்பான நடை முறைகளை அமல்படுத்தும் எந்த வொரு சுற்றறிக்கையையோ, அறி விப்பையோ அல்லது அறிவுறுத்த லையோ வெளியிட வேண்டாம். &nbsp;பள்ளிகளுக்குக் கட்டாயமாக்கப் பட்டுள்ள இந்த உத்தரவு, நாகா &nbsp;மக்களின் வரலாற்று, அரசியல் &nbsp;மற்றும் கலாச்சார யதார்த்தங்க ளைக் கணக்கில் கொள்ளாத ஒரு &nbsp;திணிப்பாகும். இந்திய அரசியல மைப்புச் சட்டத்தின் பிரிவு 51ஏ(ஏ) &nbsp;உள்ளிட்ட கட்டமைப்புகளை நாங்கள் அறிந்திருந்தாலும், நாகா லாந்தின் தனித்துவமான வரலாறு மற்றும் அடையாளத்தைப் புறக்க ணிக்கும் வகையில் எந்தவொரு அதிகாரமும் கலாச்சார அல்லது கருத்தியல் இணக்கத்தை எங்கள் மீது திணிக்க முடியாது என்பதை நாங்கள் திட்டவட்டமாகத் தெரி வித்துக் கொள்கிறோம்&rdquo; என அதில் &nbsp;கூறப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.