முந்தய பக்கம்

நடுவச்சேரியில் தென்னை நார் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு

1 May 2026, 1:38 am
நடுவச்சேரியில் தென்னை நார் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு
<p><strong>நடுவச்சேரியில் தென்னை நார் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு</strong></p><p>திருப்பூர், ஏப்.30- அவிநாசி வட்டம், நடுவச்சேரி கிரா மத்தில் தனியார் தென்னை நார் தொழிற் சாலை அமைக்கப்படுவதால் விவசா யம் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதா ரம் பாதிக்கப்படும் என அக்கிராம மக் கள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சிய ருக்கு அனுப்பியுள்ள மனுவில், நடுவச் சேரி கிராமத்தில் அமைக்கப்பட உள்ள ’வேலவன் தென்னை நார் தொழிற் சாலை’யால் இப்பகுதியில் நிலத்தடி நீர் கடும் மாசுபாட்டிற்கு உள்ளாகும். 60 ஆண்டு கால காத்திருப்பிற்குப் பின் தற்போது வந்துள்ள அத்திக்கடவு - அவி நாசி திட்ட தண்ணீரும் இதனால் பாழாகும் அபாயம் உள்ளது. மேலும், தொழிற்சாலையிலிருந்து வெளியே றும் நார் துகள்கள் காற்றில் பரவி, இப் பகுதியை சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சுவாசக் கோளாறு, தோல் அலர்ஜி மற்றும் கண் எரிச்சல் போன்ற உடல்நலப் பாதிப்புகளை ஏற்ப டுத்தும். விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் பிரதானமாகக் கொண்ட இப்பகுதியில், பொதுமக்களின் நலன் கருதி இந்த தொழிற்சாலை அமைக்க தடை விதிக்க வேண்டும் என வலியு றுத்தியுள்ளனர். இதுகுறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் தங்களின் ஆட்சேபணையை தெரிவித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram