முந்தய பக்கம்

முன்னாள் மாணவர்கள் சங்கம விழா

3 hours before
முன்னாள் மாணவர்கள் சங்கம விழா
<p><strong>முன்னாள் மாணவர்கள் சங்கம விழா</strong></p><p>உடுமலை, அக்.4-நடுமலை அரசு துவக்கப்பள்ளியில் படித்த மாணவர்கள் சார்பில், சங்கம அமுத விழா உடுமலையில் நடைபெற்றது.</p><p>கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள நடுமலை எஸ்டேட்டில் அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளியில், கடந்த 1970 முதல் 2026 வரை படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில், அப்பள்ளியில் 25 ஆண்டுகள் பணியாற்றி பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் பால்ராஜ், அவரது மனைவியும் அப்பள்ளியின் ஆசிரியருமான சுசீலா ஆகியோருக்கு பாராட்டு விழா (நடுமலை சங்கம அமுத விழா) கொண்டாடப்பட்டது. இப்பள்ளியில் படித்த மாணவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் ஒன்றிணைந்து உடுமலை தனியார் மண்டபத்தில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தினர். இவ்விழாவில் மாணவர்கள் தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டு, ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி மகிழ்ந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram