நாச்சியாபுரம் தியாகி இராமநாதன் நினைவுதின பொதுக்கூட்டம்
yesterday
<p><strong>நாச்சியாபுரம் தியாகி இராமநாதன் நினைவுதின பொதுக்கூட்டம்</strong></p><p>சிவகங்கை, ஜூன் 21- சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், நாச்சியா புரம் தியாகி இராமநாதன் நினைவு தினத்தை முன் னிட்டு பொதுக்கூட்டம் அண்ணா சிலை அருகே நடைபெற்றது. கூட்டத்திற்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருப்பத்தூர் தாலுகா செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். மாநி லச் செயலாளர் பெ.சண் முகம் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், “இளம் வயதிலேயே கம்யூ னிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு விவ சாயிகள் மற்றும் ஏழை, எளிய மக்களின் உரிமை களுக்காக போராடியவர் தியாகி இராமநாதன். 1950 -ஆம் ஆண்டு மதுரை சிறை யில் சிறைக் காவலர்களால் தாக்கப்பட்டு வீரமரணம் அடைந்தார். தியாகி இராம நாதனின் தியாகம் என்றும் நினைவுகூரப்படும்” என்றார். மாவட்டச் செயலாளர் ஆர். மோகன் பேசுகை யில், தியாகி இராமநாத னின் போராட்ட வாழ்க்கை யையும், பொதுமக்க ளுக்காக அவர் ஆற்றிய பணி களையும் நினைவுகூர்ந்தார். கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் கே. அர்ஜுனன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கே. பொன்னுத்தாய், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், வீரபாண்டி, கருப்புசாமி, முத்துராம லிங்கபூபதி, சேதுராமன், மணியம்மா, சுரேஷ், அய் யம்பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரை யாற்றினர். மேலும், இடைக்குழு செயலாளர்கள் ஜி.உலக நாதன், ஏ.ஈஸ்வரன், ஆர்.முனியராஜ், கே.ஆர்.அழகர்சாமி, எஸ்.காந்திமதி, வி.செல்வராஜ், எஸ்.ராஜு, எம்.திருநாவுக்கரசு மற்றும் மாவட்டக் குழு உறுப்பி னர்கள் பாலு, பாக்கிய லெட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர். இறுதியில், பீர்முகமது நன்றி கூறினார்.</p>
