வாய்ப்பு வாசல்
12 Nov 2025, 3:20 pm

நபார்டு வங்கியில் வாய்ப்பு - 91

ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டுக்கான தேசிய வங்கியில்(நபார்டு) உதவி மேலாளர் பணி யிடங்களை நிரப்புவதற்கான அறி விக்கை வெளியாகியுள்ளது. 91 பணி யிடங்களை நிரப்பப் போகிறார்கள். பொதுப்பிரிவு, தகவல்தொடர்பு பொறி யியல், நிதி, தணிக்கை, பாதுகாப்பு, வேளாண்மை, சட்டம், பொருளியல், மீன்வளம் மற்றும் உணவுத் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் இந்தப் பணியிடங்கள் உள்ளன. சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்த பட்சம் இளநிலைப் பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். குறைந்த பட்ச வயது 21 ஆகவும், அதிகபட்ச வயது 30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அரசு விதிமுறைகளின்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்ச்சி இருக்கும். தேர்வு முறை: மூன்று கட்டங்களாக இது அமையும். முதல்கட்டமாக முதல்நிலைத் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். முதன்மைத் தேர்வில் பெறும் மதிப் பெண்களின் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு இருக்கும். முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள் - டிசம்பர் 20, 2025 முதன்மைத் தேர்வு நடைபெறும் நாள் - ஜனவரி 25, 2026 நேர்முகத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். தமிழ்நாட்டில் சென்னை, வேலூர், கோவை, ஈரோடு, சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், நாகர்கோவில் ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைந்துள்ளன. எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திற னாளிகளுக்கு ரூ.150 கட்டணம் செலுத்த வேண்டும். மற்றவர்களுக்கான கட்டணம் ரூ. 850 ஆகும். பிரிவு மற்றும் சமூக வாரியான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, கல்வித் தகுதிகள், தேர்வுக்கான பாடத்திட்டம், ஊதியம் உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு https://www.nabard.org என்ற இணைப்பில் சென்று பார்க்கலாம். விண்ணப்பங்களை நிரப்புவதற்கான பணி நவம்பர் 8 அன்று ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டது. கடைசித்தேதி நவம்பர் 30 ஆகும்.

ஒன்றிய அரசின் கீழ் இயங்கும்

வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டுக்கான தேசிய வங்கியில்(நபார்டு) உதவி மேலாளர் பணி யிடங்களை நிரப்புவதற்கான அறி விக்கை வெளியாகியுள்ளது. 91 பணி யிடங்களை நிரப்பப் போகிறார்கள். பொதுப்பிரிவு, தகவல்தொடர்பு பொறி யியல், நிதி, தணிக்கை, பாதுகாப்பு, வேளாண்மை, சட்டம், பொருளியல், மீன்வளம் மற்றும் உணவுத் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் இந்தப் பணியிடங்கள் உள்ளன. சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்த பட்சம் இளநிலைப் பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். குறைந்த பட்ச வயது 21 ஆகவும், அதிகபட்ச வயது 30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அரசு விதிமுறைகளின்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்ச்சி இருக்கும். தேர்வு முறை: மூன்று கட்டங்களாக இது அமையும். முதல்கட்டமாக முதல்நிலைத் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். முதன்மைத் தேர்வில் பெறும் மதிப் பெண்களின் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு இருக்கும். முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள் - டிசம்பர் 20, 2025 முதன்மைத் தேர்வு நடைபெறும் நாள் - ஜனவரி 25, 2026 நேர்முகத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். தமிழ்நாட்டில் சென்னை, வேலூர், கோவை, ஈரோடு, சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், நாகர்கோவில் ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைந்துள்ளன. எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திற னாளிகளுக்கு ரூ.150 கட்டணம் செலுத்த வேண்டும். மற்றவர்களுக்கான கட்டணம் ரூ. 850 ஆகும். பிரிவு மற்றும் சமூக வாரியான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, கல்வித் தகுதிகள், தேர்வுக்கான பாடத்திட்டம், ஊதியம் உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு https://www.nabard.org என்ற இணைப்பில் சென்று பார்க்கலாம். விண்ணப்பங்களை நிரப்புவதற்கான பணி நவம்பர் 8 அன்று ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டது. கடைசித்தேதி நவம்பர் 30 ஆகும்.

செபியில் 110 காலிப்பணியிடங்கள்

ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் (SEBI) கிரேடு ஏ அதிகாரிகள் பணி யிடங்களை நிரப்புகிறார்கள். 110 இடங்களை நிரப்புவதற்கான அறி விக்கை வெளியாகியுள்ளது. செப் டம்பர் 30, 2025 ஆம் தேதியின்படி 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அரசு விதிமுறைகளின்படி தளர்ச்சி உண்டு. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் வாயிலாக நியமனம் நடக்கும். பணியிட வாரியான தகுதிகள், அனுபவம் உள்ளிட்ட கூடுதல் விபரங்களைப் பெற http://www.sebi.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி நவம்பர் 28 ஆகும்.

விமானப்படைக்கான AFCAT தேர்வு

இந்திய விமானப்படையில் பல்வேறு பிரிவுகளில் அதிகாரிகளாகப் பணியாற்றுவதற்கான வாய்ப்பு வந்தி ருக்கிறது. குறுகிய கால, நிரந்தரப் பணி யிடங்களை நிரப்பப் போகிறார்கள். இதில் தேசிய மாணவர் படை(என்.சி.சி.) மாண வர்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளது. பிரிவு வாரியான காலிப்பணியிடங்கள், கல்வித் ககுதிகள் அறிவிக்கையில் தரப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 280 இடங்களில் பெண்களுக்கு 67 இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. நிரந்தர அதிகாரிப் பணி யிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள் ஓய்வு பெறும் வயதை எட்டும் வரையில் பணியாற்றலாம். குறுகிய காலப் பணியில் விமானியாகத் தேர்வு செய்யப்படுபவர்கள் 14 ஆண்டு காலம் பணியாற்றலாம். தரைப்பணியில் சேர்பவர்கள் 10 ஆண்டு காலம் பணியாற்றலாம். குறுகிய காலப் பணியில் சேர்பவர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலமாகத் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தப் பணியிட நிரப்புதற்கு குறித்த முழு விபரங்களை https://afcat.edcil.co.in/ அல்லது https://afcat.cdac.in/AFCAT/ என்ற தளங்களில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். சந்தே கங்களைத் தீர்த்துக் கொள்ள திங்கட்கிழ மை முதல் சனிக்கிழமை வரையில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையில் +91- 9513252077 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மின்னஞ்சல் அனுப்பியும் தகவல்களைப் பெறலாம். மின்னஞ்சல் முகவரி - afcathelpdesk@edcil.co.in விண்ணப்பங்களை நிரப்புவதற்கான வாய்ப்பு நவம்பர் 17 முதல் கிடைக்கும். கடைசித் தேதி டிசம்பர் 14, 2025 ஆகும்.