தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

“நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவு”: பாஜக கருத்து நிலை சாய்வு

8 Apr 2026, 5:30 am
“நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவு”: பாஜக கருத்து நிலை சாய்வு

“நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவு”: பாஜக கருத்து நிலை சாய்வு

க.சுவாமிநாதன் மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஎம்

“நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவு” சீமான் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. அவர் மேடைகளில் பரப்பு புடைக்க பேசுவதும், தேர்தல் அறிக்கையில் பல ஆளுமையான படங்களோடு இடம் பெறச் செய்துள்ள மேற்கோள்களும் ஒருவித பிம்பம் வேறு. ஆனால் அறிக்கையின் முக்கியமான அம்சங்களை ஆய்ந்தால் பாஜகவின் நீண்ட கால இலக்குகளோடு அவை இணைந்து புள்ளிகள் புலப்படுகின்றன.

ஆவண சாட்சியம்: தந்தை பெரியாரை திடீர் என்று விமர்சிக்கவும், வசைபாடவும் சீமான் அவர்கள் ஆரம்பித்தது ஒரு குறியீடுதான். சன பரிவார் ஆதரவு மேடைகளில் ஏற ஆரம்பித்ததும், அங்கே போய் பிராமணக் கோட்பாரை கொண்டு திராவிட கோட்டையை தகர்ப்பேன் என்பதும் அடுத்த கட்ட நகர்வுதான்.

இந்த சறுக்கல்கள் எல்லாம் கடந்து எவ்வளவு தூரம் சீமான் அரசியல் பாஜகவுக்கு நெருக்கமாக வந்திருக்கிறது என்பதற்கான ஆவண சாட்சியமே “நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவு”. அதில் மூன்று விஷயங்கள் முக்கியமானவை. எவ்வாறு “நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு அறிக்கை” பாஜகவின் அதிகாரக் குறிப்பு, பன்மைத்துவ எதிர்ப்பு, நாடாளுமன்ற உள்ளடக்கத்தை மாற்றுவது ஆகிய நோக்கங்களுக்குத் துணை போகிறது என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

“அன்பான சர்வாதிகாரி”: ஒன்று, நமது ஆட்சி முறை “தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சி முறை” என்கிறார். அதற்கு இருக்கும் நிலையில் உள்ள குழந்தைக்கு ஊசி போடுவது போல, ஆசிரியர் குழந்தைக்கு மூன்று முறை எழுதிக் கொண்டு வர பணிப்பது போல, பனை மரத்தின் மட்டையை கிழித்து அதன் வளர்ச்சிக்கு வழி வகுப்பது போல என்றெல்லாம் உதாரணங்கள் தருகிறார்.

லீ குவான் யூ ஆட்சிக் காலத்தில் ஊடக சுதந்திரம் நசுக்கப்பட்டது; பொது மக்களின் எதிர்ப்பு வடிவங்கள் அனுமதிக்கப்படவில்லை; தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் உள்ளிட்ட உரிமைகள் பறிக்கப்பட்டன. ஒரு தேசம், ஒரு தலைவர் என்கிற ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி நிரலையே “அன்பான சர்வாதிகாரி” என்று வழி மொழிகிறார்.

குடியரசுத் தலைவர் நேரடித் தேர்வு: இரண்டாவது அம்சம் மேலே குறிப்பிட்டுள்ள “அன்பான சர்வாதிகாரத்துடன்” தொடர்புடையதே. வரைவின் வார்த்தைகளில், “இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டத்தின் படி இந்தியாவின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவர். அவரே நாட்டின் தலைவராகவும் உள்ளார். ஆனால் அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. இது மக்களாட்சி தத்துவத்திற்கு எதிராக உள்ளது.”

தொகுதி மறு வரையறை: மூன்றாவது, மோடி யானை வருவதற்கு முன்பே சீமானின் மணியோசை கேட்டு இருக்கிறது. வரைவு கூறுவது இது, “மக்கள் தொகை நான்கு மடங்கு உயர்ந்துள்ள நிலையில் 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு நாடாளுமன்றத் தொகுதி என மாற்ற வேண்டும்”.

பாஜக தொகுதி மறு வரையறையை மக்கள் தொகை அடிப்படையில் செய்வதன் மூலம் தென் மாநிலங்களை வஞ்சிக்க முனைகிறது என்ற விவாதம் நாடு முழுக்க நடைபெற்றுக் கொண்டிருக்கிற வேளையில் “நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவு” மக்கள் தொகையை அளவுகோலாகக் கொண்டே பேசுகிறது என்பது யாருக்கு உதவும்? பாஜகவின் அடுத்த நிகழ்ச்சி நிரலுக்கு முன் கூட்டியே கை தூக்குகிறது “நாம் தமிழர்”.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.