“நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவு”: பாஜக கருத்து நிலை சாய்வு
8 Apr 2026, 5:30 am

“நாம் தமிழர் ஆட்சி செயல்பாட்டு வரைவு”: பாஜக கருத்து நிலை சாய்வு

க.சுவாமிநாதன். “நாம் தமிழர் ஆட்சி செயல்பாட்டு வரைவு” சீமான் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. அவர் மேடைகளில் பரப்பு புள்ளி விவரங்களைப் பேசுவதும், தேர்தல் அறிக்கை மில் பல ஆளுமையான படங்களோடு இடம் பெறச் செய்துள்ள மேற்கொள்களும் ஒருவித பிம்பம் வேறு.

ஆனால் அறிக்கையின் முக்கியமான அம்சங்களை ஆய்ந்தால் பாஜகவின் நீண்ட கால இலக்குகளோடு அவை இணைந்து புள்ளிகள் புலப்படுகின்றன. ஆவண சாட்சியம். தந்தை பெரியாரை இவர் என்று விமர்சிக்கவும், வசைபாடவும் சீமான் அவர்கள் ஆரம்பித்தது ஒரு குறியீடுதான்.

சங் பரிவார் ஆதரவு மேடைகளில் ஏற ஆரம்பித்ததும், அங்கே போய் பிராமணக் கலாச்சாரம் கொண்டு திராவிடக் கோட்டையை தகர்ப்பேன் என்பதும் அடுத்த கட்ட நகர்வுகள். பாஜக அணியில் உள்ள ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர் போன்றவர்கள் தேர்தல் நேரத்தில் கூட தங்களின் கல்வி நிலையங்களில் சீமானுக்கு மேடை கொடுப்பதும் பாண்டே போன்றவர்களை அதில் இணைப்பதும் தற்செயலானவை அல்ல.