முந்தய பக்கம்

என்.வரதராஜன் எனும் போராளித் தலைவர்

10 Apr 2026, 5:30 am
என்.வரதராஜன் எனும் போராளித் தலைவர்

என்.வரதராஜன் எனும் போராளித் தலைவர்

தோழர் என்.வி. என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் தலைவர் என்.வரதராஜன், திண்டுக்கல் மாவட்டம் கம்பிளியம்பட்டியில் ஒரு எளிய கிராமத்தில் 1924 ஆம் ஆண்டு இதே நாளில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை மட்டுமே பயின்ற அவர், திண்டுக்கல்லின் பிரபல பஞ்சாலையில் தொழிலாளியாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கினார்.

அங்குத் தொழிலாளர்கள் அமைத்ததற்காகப் பணியிலிருந்து நீக்கப்பட்ட அவர், முழுநேரப் பொதுவுடைமை இயக்கவாதியாகத் தன்னை உயர்த்திக் கொண்டார். 1967-இல் வேடசந்தூர் தொகுதியிலிருந்து, பின்னர் 1977, 1980-களில் திண்டுக்கல் தொகுதியிலிருந்தும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மூன்று முறை பணியாற்றிய பெருமைக்குரியவர். சட்டமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகளும், மக்கள் நலனுக்காக அவர் நடத்திய போராட்டங்களும் என்றும் நினைவுகூரத்தக்கவை.

Share
FacebookXWhatsAppTelegram