என்.வரதராஜன் எனும் பண்பாளர் தலைவர்
10 Apr 2026, 5:30 am
<p><strong>என்.வரதராஜன் எனும் பண்பாளர் தலைவர்</strong></p><p>தோழர் என்.வி. என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் தலைவர் என்.வரதராஜன், திண்டுக்கல் மாவட்டம் கம்பிளியம்பட்டி எனும் சிறு கிராமத்தில் 1924 ஆம் ஆண்டு இதே நாளில் பிறந்தார்.</p><p>ஆரம்பக் கல்வியை மட்டுமே பயின்ற அவர், திண்டுக்கல்லின் பிரபல பஞ்சாலைகளில் தொழிலாளியாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கினார். அங்குத் தொழிலாளர் அமைப்பிற்காகப் பணியாற்றியதற்காக நீக்கப்பட்ட அவர், முழுநேரப் பொதுவுடைமை இயக்கவாதியாகத் தன்னை உயர்த்திக் கொண்டார்.</p>
