தோழர் என்.சங்கரய்யா பிறந்தநாள் விவசாயிகள் சங்கம் மரியாதை
15 Jul 2026, 9:25 pm
<p><strong>தோழர் என்.சங்கரய்யா பிறந்தநாள் விவசாயிகள் சங்கம் மரியாதை</strong></p><p>விருதுநகர், ஜூலை 15- சுதந்திரப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரு மான தோழர் என்.சங்கரய்யாவின் பிறந்த தினம் புதனன்று அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிலையில், விருதுநகரில் தோழர் எம்.ஆர்.வி நினைவகத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் தோழர் சங்க ரய்யாவின் உருவப் படத்திற்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில், அகில இந்திய துணைத் தலைவர் ஏ.லாசர், மாநில பொருளாளர் பழ னிச்சாமி, மாநில செயலாளர்கள் மலை விளைபாசி, வசந்தாமணி, மாவட்டத் தலை வர் எஸ்.பூங்கோதை, மாவட்டச் செயலாளர் எம்.சுந்தரபாண்டியன், மாவட்ட பொருளா ளர் சி.ஜோதிலட்சுமி ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.</p>
