முந்தய பக்கம்

புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி 5 ஆவது முறையாக பதவியேற்றார்!

13 May 2026, 10:01 pm
புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி 5 ஆவது முறையாக பதவியேற்றார்!
<p><strong>புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி 5 ஆவது முறையாக பதவியேற்றார்!</strong></p><p>புதுச்சேரி, மே 13- புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி 5 ஆவது முறையாக புதன்கிழமை பதவியேற்றார். புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர் ரங்கசாமி தலைமையில் மீண்டும் கூட்டணி ஆட்சி அமைந்தது. இதையொட்டி புதுச்சேரி மாநில முதல்வர், அமைச்சர்கள் பதவியேற்பு விழா துணைநிலை ஆளுநர் மாளிகை வளாகத்தில் நடைபெற்றது. இதில் புதுவை மாநில முதல்வராக 5 ஆவது முறையாக ரங்கசாமி பதவியேற்றார். அவரு டன், அமைச்சர்களாக பாஜக நமச்சிவாயம், என்ஆர் காங்கிரஸ் மல்லாடி கிருஷ்ணா ராவ் பதவியேற்றனர். முதல்வர், அமைச்சர்களுக்கு துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழா வில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், சந்தோஷ்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மல்லாடி தெலுங்கில் பதவி ஏற்றார். பதவியேற்ற பின்பு முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவைக்கு நடந்து வந்தார். அங்கே, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு தனது அறைக்கு வந்து இருக்கையில் அமர்ந்தார். அதைத்தொ டர்ந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட் டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram