புது ஆயக்குடி ஜமாத் நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டினார் என். பாண்டி!
8 Apr 2026, 5:30 am

புது ஆயக்குடி ஜமாத் நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டினார் என். பாண்டி!

பழனி, ஏப். 7 - மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பழனி தொகுதியில் போட்டியிடும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் தோழர் என். பாண்டி, புது ஆயக்குடி ஜமாத் மஸ்ஜிதின் முத்தவல்லி, செயலாளர் மற்றும் ஆயக்குடி ஜமாத் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இந்தச் சந்திப்பின் போது, "பாஜகவின் மதவாத அரசியலால் இந்தியா முழுவதும் சிறுபான்மை மக்கள், மோசமான பிரச்சனைகளைச் சந்தித்து வரும் நிலையில், ஆர்எஸ்எஸ் - பாஜகவின் மதவெறி அரசியலுக்கு எதிராக இடதுசாரிகளும், திமுக உள்ளிட்ட கட்சிகளும் மட்டும் தான், உறுதியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

எனவே, தமிழகத்தின் அமைதி, நல்லிணக்கம் பாதுகாக்கவும், பாஜக - அதிமுக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும். மக்கள் அனைவரும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று என். பாண்டி கேட்டுக் கொண்டார்.