ஆயக்குடியில் என். பாண்டி வாக்கு சேகரிப்பு!
9 Apr 2026, 5:30 am

ஆயக்குடியில் என். பாண்டி வாக்கு சேகரிப்பு!

பழனி, ஏப். 8 - திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பழனி தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் என். பாண்டி, ஆயக்குடி கொய்யா மார்க்கெட்டில் கதிர் அரிவாள் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

அப்போது, என். பாண்டிக்கு விவசாயிகள், சிறு வியாபாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே ஏழைகளுக்காக போராடும் கட்சி. அந்தக் கட்சி வெற்றி பெற்றால் தான், எங்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று கூறிய விவசாயிகள், வேட்பாளர் என். பாண்டி, விவசாயிகளுக்கான பல்வேறு போராட்டங்களில் முன்னின்று பணியாற்றியதை நினைவு கூர்ந்து தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.

முன்னதாக, அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி மைதானத்தில் நடைப்பயணம் மேற்கொண்டவர்களிடம் சிபிஎம் வேட்பாளர் என். பாண்டி வாக்கு சேகரித்தார்.