‘மேடைக் கலைவாணர்’ தோழர் என்.நன்மாறன் 5-ஆம் ஆண்டு நினைவேந்தல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிறுபான்மை மக்கள் நலக்குழு மலர் அஞ்சலி
28 Oct 2026, 9:28 pm

‘மேடைக் கலைவாணர்’ தோழர் என்.நன்மாறன் 5-ஆம் ஆண்டு நினைவேந்தல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிறுபான்மை மக்கள் நலக்குழு மலர் அஞ்சலி

மதுரை, அக்.28-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த தோழர் என்.நன்மாறனின் 5 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி மதுரையில் புதன்கிழமை நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார் பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்ல் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், கட்சியினர் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர்.

மதுரை மாநகர் மாவட்ட மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் மா.கணேசன் தலைமை வகித் தார். மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாநிலக் குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், மதுரை மாநகராட்சி பொறுப்பு மேயர் தி.நாகராஜன் ஆகியோர் தோழர் என்.நன்மாறனின்உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜா.நரசிம்மன், அ.ரமேஷ், இரா.லெனின், எம்.பாலசுப்பிரமணியன், வை.ஸ்டாலின், ஆர்.சசிகலா, ஜெ.லெனின், டி.செல்வராஜ் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள், பகுதிக் குழுச் செயலாளர்கள் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ் சலி செலுத்தினர்.

சிறுபான்மை மக்கள் நலக்குழு அஞ்சலிதொடர்ந்து, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மதுரை மாநகர் மாவட்டக் குழு சார்பில் ஞானஒளிவுபுரம் கார்க்கி படிப்பகம் அருகில் தோழர் என்.நன்மாறனின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் மலர் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் எஸ்.பழனிவேல் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.பிரிட்டோ முன்னிலை வகித்தார்.மதுரை மாநகராட்சி பொறுப்பு மேயர் தி.நாகராஜன், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டத் தலைவர் கே.அலாவுதீன், கிறிஸ்துவ வாழ்வுரிமை இயக் கத்தைச் சேர்ந்த அருட்தந்தை பால் பிரிட்டோ, மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் அல்ஹாஜ் எஸ்.ஏ.லியாகத் அலி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தி ஒன்று பகுதிச் செயலாளர் ஏ.பாண்டி, மாவட் டச் செயலாளர் என்.கணேசமூர்த்தி, மாவட்டப் பொருளாளர் எம்.ஜான்சன் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.மேலும், தோழர் என்.நன்மாறனின் மகன் குணசேகரன், மருமகள் லாவண்யா, சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட நிர்வாகிகள், மாவட்டக் குழு உறுப்பினர் கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று நினைவஞ்சலி செலுத்தினர்.