தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சர்வாதிகாரத்தை கொண்டு வர வாக்காளர்களை நீக்குகின்றனர் சிஜேபி போராட்டத்தில் என்.குணசேகரன் பேச்சு

4 Oct 2026, 1:07 am
சர்வாதிகாரத்தை கொண்டு வர வாக்காளர்களை நீக்குகின்றனர் சிஜேபி போராட்டத்தில் என்.குணசேகரன் பேச்சு

சர்வாதிகாரத்தை கொண்டு வர வாக்காளர்களை நீக்குகின்றனர் சிஜேபி போராட்டத்தில் என்.குணசேகரன் பேச்சு

சென்னை, அக்.3-சர்வதிகாரத்தை கொண்டு வர ஏதுவாக எஸ்ஐஆர் என்ற பெயரில் வாக்கா ளர்களை தேர்தல் ஆணையம் நீக்கி வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் என்.குணசேகரன் கூறினார்.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி வெள்ளியன்று (அக்.2) சென்னையில் காக்ரோஜ் ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த போராட்டத்தில் பேசிய மத்தியக் குழு உறுப்பினர் என்.குணசேகரன், “எஸ்ஐஆர் நடவடிக்கையின் மூலம்தேர்தல் ஆணையம் 13 கோடி பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியிருப்பது ஜனநாயக படுகொலை. தேர்தல் மோசடி. உலக நாடுகளில் மக்கள் வெளியேற்றப்பட்டார்கள், இடம்பெயர்ந்தார்கள்என்று செய்திகள் வரும்.

இந்தியாவில் அவ்வாறு செய்ய முடியாததால், திட்டமிட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து 13 கோடி பேரை நீக்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலா னோர் தலித், பழங்குடி மற்றும் சிறுபான்மை மக்களாவர். சிறுபான்மை அழிப்பு என்ற ஆர்எஸ்எஸ்-சின் சித்தாந்தத்தை மோடியின் வழிகாட்டுதலோடு தேர்தல் ஆணையம் திட்டமிட்டு செய்துள்ளது.மேற்கு வங்கத்தில் உச்சநீதிமன்றமே தலையிட்டு, நீக்கப்பட்டவர்களில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோரை மீண்டும் சேர்க்க முயற்சித்தது. அதில், 16 லட்சம் பேருக்கு ஆட்சேபனை தெரிவித்து தேர்தல் ஆணையம் பெயரை நீக்கியுள்ளது. ஜனநாயகத்தை, அரசியலமைப்பு சட்டப்படி உருவான அமைப்புகளை ஒழித்து, சர்வதிகாரத்தை கொண்டு வர இவற்றையெல்லாம் செய்கின்றனர். இதனை எதிர்த்து வலுவாக போராடுவோம்” என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.