தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புது ஆயக்குடி ஜமாத் நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டினார் என். பாண்டி!

7 Apr 2026, 5:38 pm
புது ஆயக்குடி ஜமாத் நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டினார் என். பாண்டி!
<p><strong>புது ஆயக்குடி ஜமாத் நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டினார் என். பாண்டி!</strong></p> <p>பழனி, ஏப். 7 - மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி யின் சார்பில் பழனி தொகுதியில் போட்டியிடும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வேட்பாளர் தோழர் என். பாண்டி, புது ஆயக்குடி ஜாமியா மஸ்ஜிதின் முத்தவல்லி, செயலாளர் &nbsp;மற்றும் ஆயக்குடி ஜமாத் நிர்வாகி களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்தச் சந்திப்பின் போது, &ldquo;பாஜக-வின் மதவாத அரசியலால் இந்தியா முழுவதும் சிறுபான்மை மக்கள், மோசமான பிரச்சனைகளைச் சந்தித்து வரும் நிலையில், ஆர்எஸ்எஸ் - பாஜகவின் மதவெறி அரசியலுக்கு எதிராக இடதுசாரிகளும், திமுக உள்ளிட்ட கட்சிகளும் மட்டும் தான், உறுதியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டிலும் திருப்ப ரங்குன்றம், பழனி போன்ற ஆன்மீகத் தலங்களை மையமாக வைத்து கலவரத்தை ஏற்படுத்த திட்டமிடும் நிலையில், அதனையும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியிலுள்ள கட்சிகளே உறுதியுடன் எதிர்த்து நிற்கின்றன. எனவே, தமிழகத்தின் அமைதி, நல்லிணக்கம் பாதுகாக்கப் பட பாஜக - அதிமுக கூட்டணி தோற் கடிக்கப்பட வேண்டும். மக்கள் அனை வரும் திமுக தலைமையிலான கூட்டணி யை ஆதரிக்க வேண்டும். பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் தமக்கு சுத்தியல் &nbsp;அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்&rdquo; என்று என். பாண்டி கேட்டுக் கொண்டார். திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பி னர் ஆர். சச்சிதானந்தம், திமுக பேரூர் செயலாளர் வி.ஏ. சின்னதுரை, டி.அபூபக்கர், அப்பாஸ் மந்திரி, வட்டச் செயலாளர் சேக் பரீத், முகம்மது முபாரக், லெப்பை சையது, நியாஸ் அகமது, ஜாகீர் உசேன், மு. சாதிக் அலி, எஸ்டிடியு மாவட்டத் தலை வர் ஏ.எம். பாசித், திமுக பேரூர் அவைத் தலைவர் ஆதம் சாயபு, பேரூர் செய லாளர் சாதிக் அலி மற்றும் தோழமைக் கட்சியினர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.