தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கற்பிதங்களும், கதையாடல்களும், எதார்த்த நிலையும்!

7 Apr 2026, 5:38 pm
கற்பிதங்களும், கதையாடல்களும், எதார்த்த நிலையும்!

கற்பிதங்களும், கதையாடல்களும், எதார்த்த நிலையும்!

2026 மார்ச் 7 அன்று திருவனந்த புரத்திலிருந்து வெளியான ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழின் கேரளச் செய்தியாளரின் அறிக்கை ஒரு  முக்கியமான அவதானிப்பை முன்வைக்கிறது: “பல்வேறு ஊழல் முறைகேடுகள் குறித்த புகார்கள் ஆதிக்கம் செலுத்திய முந்தைய சட்டமன்றத் தேர்தல்களைப் போலன்றி, இரண்டாவது முறை யாக ஆட்சி அமைத்துள்ள இடது ஜனநாயக முன்னணி (LDF 2.0) அத்தகைய பெரிய சர்ச்சைகள் ஏதுமின்றி, தனது பத்தாண்டு கால ‘வளர்ச்சிப் பதிவு’ களை (Development Record) முன்னிறுத்தித் தேர்தலுக்கான களத்தை அமைத்துள்ளது.

இது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியை ஒரு விசித்திரமான இக்கட்டில் தள்ளியுள்ளது. ஆளும் கூட்டணியின் குறைகளைச் சுட்டிக்காட்டுவதில் கவனம் செலுத்த வேண்டிய இத்தருணத்தில், அதிகாரத்தை இழந்து பத்து ஆண்டுகள் கழிந்தபின்னரும்கூட, தனது முந்தைய அரசின் செயல்பாடுகளை நியாயப்படுத்திப் பேச வேண்டிய கட்டாயத்திற்கு கேரளத்தில் காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது.”

இடதுசாரிகள் கணிசமான செல்வாக்குடன் விளங்கும் மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்ட மன்றத் தேர்தல்களைப் பொறுத்தவரை, அங்கு நிலவும் அடிப்படை அரசியல் கண்ணோட்டங்களின் மோதலை இந்த அறிக்கை துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. கார்ப்பரேட் - பாஜக கள்ளக் கூட்டணி மற்றும் நிதி பலம் இந்தியாவில் நிலவும் தாராளமயச் சூழலில், பிரதான கார்ப்பரேட் ஊடகங்களின் செயல்பாடுக ளில் ஒரு மிகப்பெரிய அடிப்படை மாற்றம் ஏற்பட்டுள் ளது.

குறிப்பாக, மோடி அரசு பொறுப்பேற்ற கடந்த 12 ஆண்டுகளில் இம்மாற்றம் மிகத் தீவிரமாக வெளிப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இடையே நிலவும் கட்டமைப்பு ரீதியான கள்ளக் கூட்டணியே (Sy stemic Nexus) இம்மாற்றத்திற்கு வழிவகுத்துள் ளது. இது வெறும் நட்பு அல்ல; மாறாக ஜனநாய கத்தை விலைக்கு வாங்கும் ஒரு பேராபத்து. ‘ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான சங்கம்’ (ADR) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, 2024-25 நிதியாண்டில் பாஜக பெற்ற நன்கொ டைகள் 6,074 கோடி ரூபாய். இது முந்தைய ஆண்டை  விட (2,243 கோடி) 171 சதவீதம் அதிகமாகும். காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற நான்கு முக்கியக் கட்சிக ளின் மொத்த நன்கொடைகளை விட பாஜக-வின் நிதி பலம் பத்து மடங்கு அதிகம். இத்தகைய அசுரத்த னமான நிதி வளம், கார்ப்பரேட் ஊடகங்களை விலைக்கு வாங்கவும், சமூக ஊடகங்களில் போலிச் செய்திகளையும் வெறுப்புப் பிரச்சாரங்களையும் அருவருக்கத்தக்க வகையில் கட்டவிழ்த்து விடவும் பாஜக-விற்கு உதவுகிறது.

உண்மைக்குப் புறம்பான அரசியலும் ஜனநாயக நெருக்கடியும் இன்று நடுநிலையான செய்தியிடல் என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு, குறிப்பிட்ட கற்பிதங்களை (Perceptions) உருவாக்கி அவற்றை ஒரு கதையா டலுக்குள் (Narrative) ஒருங்கிணைக்கும் முயற்சி களே முன்னிலைப்படுத்தப்படுகின்றன. இது இரு வழிகளில் ஆளும் வர்க்கத்திற்கு உதவுகிறது: Yமக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் உண்மை யான பிரச்சனைகள் மற்றும் வாழ்வாதாரக் கேள்வி களிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புதல். Y ஆட்சியாளர்களின் நிர்வாகத் தோல்விகளைப் பற்றிப் பொறுப்புக்கூற விடாமல் தடுத்தல். உலகெங்கிலும் ‘உண்மைக்குப் புறம்பான அரசியல்’ (Post-truth) என்பது இதையே குறிக்கி றது. இன்று இதுவே ‘புதிய இயல்பு’ ஆகிவிட்டது.

கேரளத்தில் பினராயி விஜயன் அரசு இந்தச் சூழலை முறியடித்து, தனது மக்கள் நலத் திட்டங்களின் அடிப்படையில் தேர்தலை எதிர்கொள்கிறது. சட்ட மன்றத்தில் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் செயல்பாடுகளில் குறை காண முடியாமல், ஒத்தி வைப்புத் தீர்மானத்தைக் கொண்டுவரக் கூடத் தவறிவிட்டது அவர்களின் அரசியல் திவால்தன்மை யையே காட்டுகிறது என பினராயி விஜயன் சுட்டிக்காட்டியது மிகச்சரியான ஒன்றாகும். மறைக்கப்படும் உண்மைகளும் பிரதமரின் உரையும் நாடாளுமன்றத்தில் தற்போதைய கூட்டத் தொடரில், நீண்ட கால தாமதத்திற்குப் பிறகு பிரதமர் ஆற்றிய உரை, அவர் எதை வெளிப்படுத்தி னார் என்பதைக் காட்டிலும் எதை மறைத்தார் என்ப தையே அம்பலப்படுத்தியது. ஈரானின் மீது அமெ ரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்து வதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு பிரதமர் மேற் கொண்ட இஸ்ரேல் பயணத்தின் மர்மம் குறித்தோ, அதன் விளைவுகள் குறித்தோ அவர் ஒரு வார்த்தை  கூடப் பேசவில்லை. கா

சாவில் யூத இனவெறி அரசு நிகழ்த்தும் இனப்படுகொலையையும், மேற்குக் கரையில் நிகழும் இன அழிப்பையும் உலகம் கண்டித்துக் கொண்டிருக்கும் வேளையில், எதார்த்த நிலையை மறைத்து ‘இஸ்ரேல் ஜனநாயகத்தின் தந்தைநாடு; இந்தியா ஜனநாயகத்தின் தாய்நாடு’ என்பது போன்ற வெற்றுப் பெருமிதக் கதையாடல்களை உருவாக்குவதிலேயே பிரதமர் குறியாக இருந்தார். கோவிட் காலத்தைப் பற்றியும், பெட்ரோ லியப் பொருட்களின் விநியோகப் பாதிப்பைக் காட்டி யும், மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவது இவரது உத்தியாக உள்ளது. இது எதார்த்தத்திலி ருந்து மக்களைத் துண்டிக்கும் ஒரு சூழ்ச்சியாகும். இராணுவமயமாக்கலும்  தேர்தல் களமும் இடதுசாரித் தீவிரவாத சவாலை எதிர்கொள்வ தில் சமூக-பொருளாதார, சித்தாந்த ரீதியான  காரணிகளைப் புறந்தள்ளிவிட்டு, ‘இராணுவமய மாக்கல்’ எனும் ஒற்றைப் பரிமாண உத்தியை ஒன்றிய  உள்துறை அமைச்சர் கையில் எடுத்துள்ளார்.

பஹல்காமில் பெருகிவரும் ஊழலையும் பயங்கர வாத ஊடுருவலையும் கட்டுப்படுத்தத் தவறிய அரசு, அதில் தனது தோல்விகளை மறைக்க எதிர்க் கட்சிகள் மீது, குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது கற்பனையான குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் தோற்றம் மற்றும் திட்டம் குறித்து அவர் முன்வைக்கும் கருத் துக்கள் முற்றிலும் உண்மைக்கு மாறானவை. மேற்கு வங்கம், தமிழ்நாடு, அஸ்ஸாம், புதுச்சேரி என அனைத்துத் தேர்தல் களங்களிலும் கார்ப்பரேட் நலன்களுக்காக மக்களை வெளியேற்றுவதையும், பிளவுகளையும் பரஸ்பர வெறுப்பையும் உரு வாக்குவதையுமே பாஜக தனது உத்தியாகக் கொண்டுள்ளது.

மணிப்பூர் வன்முறைகளை விளக்க  முடியாத அஸ்ஸாம் முதலமைச்சர், ‘இரட்டை என்ஜின்’ ஆட்சியின் பெயரால் வெறுப்புப் பிரச்சா ரத்தை முன்னெடுக்கிறார். குறிப்பாக மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாமில் ‘ஊடுருவல்’ என்ற  போர்வையில் மக்களின் வாக்களிக்கும் உரிமை யைப் பறிக்கும் தேர்தல் ஆணையத்தின் ‘சிறப்பு தீவிர திருத்தம்’ (SIR) போன்ற நடவடிக்கைகள் கவலை யளிக்கின்றன. வெறும் அதிகாரப்  போட்டி அல்ல! கேரளமாக இருந்தாலும் சரி, பிற மாநிலங்க ளாக இருந்தாலும் சரி, தேர்தல் களம் என்பது வெறும் அதிகாரப் போட்டி அல்ல; அது நமது குடியரசு அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்க ளைப் பாதுகாப்பதற்கான போர்

. கார்ப்பரேட்டு களின் நலன்களுக்காக உழைக்கும் மக்களை வெளியேற்றுவதையும், மதப் பிளவுகளை உரு வாக்குவதையும் முறியடிக்க வேண்டிய தருணம் இது. இடதுசாரிகளைப் பொறுத்தவரை, உழைக்கும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனையும் முழுமை யான வளர்ச்சியும் வெறும் தேர்தல் முழக்கங்கள் அல்ல. அவை மாற்றத்திற்கான உந்துசக்திகள். மக்களின் வாழ்வாதாரம், ஜனநாயகம் மற்றும் ஒற்று மையைப் பாதுகாக்க இந்தத் தேர்தல் சவால்களை உறுதியுடன் எதிர்கொள்வோம்! ஏப்ரல் 05, 2026 - பீப்பிள்ஸ் டெமாக்ரசி தமிழில் சுருக்கம் : ச.வீரமணி

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.