மதுராந்தகத்தில் கரும்புகையுடன் எரிந்த மர்ம பொருள்
30 Mar 2026, 4:56 pm

மதுராந்தகத்தில் கரும்புகையுடன் எரிந்த மர்ம பொருள்

மதுராந்தகம், மார்ச் 30-

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் புறவழிச்சாலை யோரம் மர்மபொருட்களை கொட்டிய மர்மநபர்கள், அவற்றை தீயிட்டு எரித்ததாக கூறப்படுகிறது. இதனால், புறவழிச்சாலையில் கரும்புகை வெளியேறியதால் நகருக்குள் செல்லும் வாகனங்கள் உள்ளே செல்ல முடியமாத நிலை ஏற்பட்டதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த, மதுராந்தகம் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், கரும் புகை சூழ்ந்ததால் அப்பகுதியில் வாகன விபத்து அச்சம் ஏற்பட்டு ஏராளமான பொதுமக்கள் கூடினர். இதை யடுத்து, மதுராந்தகம் போலீசார் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும், மதுராந்தகம் டிஎஸ்பி.தீபக்ரஜினி சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். மேலும், தீயணைப்பு வீரர்கள் தீயை சற்று அனைத்ததும் மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்த பொருட்கள் தொழிற்சாலை கழிவுகள் என தெரிந்தது. எனினும், போலீஸார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

லாரி மோதி 10 வயது சிறுவன் பலி