வங்காளத்தில் “மாயமான” பெண் வாக்காளர்கள்!
30 Mar 2026, 3:40 pm
<p><strong>வங்காளத்தில் “மாயமான” பெண் வாக்காளர்கள்! </strong></p>
<p>தேர்தல் ஆணையத்தின் ‘சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை’ காரணமாக, மேற்கு வங்கத்தில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு முதல்முறையாகச் சரிவைச் சந்தித்துள்ளது. திடீர் சரிவு ஏன்? கடந்த 2013-ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக உயர்ந்து வந்த பெண் வாக்காளர்களின் விகிதம், தற்போது 1,000 ஆண் வாக்காளர்களுக்கு 964 பெண்கள் என்ற அளவில் குறைந்துள்ளது. 2025-இல் 969 ஆக இருந்த இந்த விகிதம், ஒரே ஆண்டில் சரிந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 2017-க்குப் பிறகு மிகக் குறைந்த அளவான 3.16 கோடியாகக் குறைந்துள்ளது. மத்திய சட்ட அமைச்சகம் மக்களவையில் தாக்கல் செய்துள்ள புள்ளிவிவரங்களின்படி, ஆண் வாக்காளர்களை விட (15.42%), பெண் வாக்காளர்களின் (15.85%) பெயர்களே அதிக அளவில் நீக்கப்பட்டுள்ளன. திரிணாமுல் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் பெண் வாக்காளர்களைக் கவர போட்டிப் போட்டுக் கொண்டு தேர்தல் அறிக்கைகளைத் தயார் செய்து வரும் நிலையில், திடீரென லட்சக்கணக்கான பெண் வாக்காளர்கள் பட்டியலிலிருந்து “மாயமாகி யுள்ளது” பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p>
