முந்தய பக்கம்

மைலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கு: குற்றவாளியின் பிணை மனு தள்ளுபடி

8 Jul 2026, 1:40 am
மைலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கு:  குற்றவாளியின் பிணை மனு தள்ளுபடி
<p><strong>மைலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கு: குற்றவாளியின் பிணை மனு தள்ளுபடி</strong></p><p>சென்னை, ஜூலை 7 - ரூ.600 கோடி மைலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளி தேவநாதன் யாதவின் கூட்டாளியான மற்றொரு குற்ற வாளி சுதிர் சங்கர் சிறையில் உள்ளார். இந்நிலையில் சுதிர் சங்கர், “தான் நீண்ட நாட்களாகச் சிறை யில் இருப்பதாகவும், நிதி நிறுவனத் தில் இயக்குநர் பொறுப்பில் இருந்ததைத் தவிர வேறு எந்தத் தவறும் செய்யவில்லை எனவும் கூறி, தனக்குப் பிணை வழங்க வேண்டுமென உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் மீதான வாதங்கள் கடந்த ஜூன் 25 அன்று முடி வடைந்து, உத்தரவுக்காக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட வைப்பீட்டா ளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறி ஞர் திருமூர்த்தி, பிணை வழங்கக் கூடாது என்று கடுமையாக ஆட்சேபணை தெரிவித்தார். ஏராளமான ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதார மொத்த சேமிப்பையும் சூறையாடி, 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த நிறுவனத்தைத் திவா லாக்கியுள்ளனர் எனவும், ஏற்கனவே விதித்த ரூ.100 கோடி டெபாசிட் நிபந்தனையை நிறை வேற்றவில்லை எனவும் அவர் வாதிட்டார். இதையடுத்து நீதிபதி குமரப்பன், பிணை மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப் பித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram