மியான்மரில் பயங்கர வெடி விபத்து: குழந்தைகள் உட்பட 45 பேர் உயிரிழப்பு
1 Jun 2026, 11:21 am
<p>மியான்மரில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி குழந்தைகள் உட்பட 45 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>மியான்மரின் எல்லைப் பகுதியில் சுரங்கப் பணிகளுக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் இருந்த கட்டிடத்தில் திடீரென சக்திவாய்ந்த வெடிவிபத்து ஏற்பட்டது. வெடிபொருட்கள் அடுத்தடுத்து வெடித்ததில் கட்டிடம் முழுமையாக சேதமடைந்ததுடன், சம்பவ இடம் முழுவதும் புகை மண்டலமாக மாறியது.</p><p>இந்த கோர விபத்தில் குழந்தைகள் உட்பட 45 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சுமார் 70 பேர் பலத்த காயமடைந்த நிலையில் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.</p><p>சுரங்கப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் கட்டிடத்திற்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததே இந்த விபத்திற்கான முக்கிய காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
