மியான்மரில் வெடிமருந்துகள் வெடித்து 39 பேர் பலி! பெரும் அழிவை சந்தித்த கிராமம்
1 Jun 2026, 9:00 pm
<p><strong>மியான்மரில் வெடிமருந்துகள் வெடித்து 39 பேர் பலி! பெரும் அழிவை சந்தித்த கிராமம்</strong></p><p>நைப்பியிதாவ், ஜூன் 1 - மியான்மர் நாட்டில் செயல்பட்டு வரும் உள்நாட்டு கிளர்ச்சிப் படை ஒன்று பதுக்கி வைத்திருந்த வெடி பொருட்கள் திடீரென வெடித்துச் சிதறியதில், ஒரு கிராமமே முற்றிலும் அழிந்து போனது. இந்த விபத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 75 பேர் படுகாயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மரின் ‘காங் டாட்’ (Kaung Tat) எனும் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மதியம் இந்த பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இப்பகுதியைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ள டி.என்.எல்.ஏ (TNLA - Ta’ang National Liberation Army) என்ற அமைப்பு, விபத்தை உறுதி செய்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் வீடுகளின் இடிபாடுகளுக்கு இடையே மக்களின் உடல் உறுப்புகள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஒரு மிகப்பெரிய பள்ளம் (Crater) உருவாகியுள்ளது. வெடிமருந்துகளின் வீரியம் காரணமாக அந்த கிராமத்தின் பாதிக்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகின. மருத்துவமனை பதிவுகளின்படி 39 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தாலும் பலி எண்ணிக்கை 55-க்கும் மேல் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.</p>
