தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

“My Father’s Shadow” “தந்தையின் நிழலில் ஒரு பயணம்” - “தந்தையின் நிழலில் ஒரு பயணம்”

6 Jun 2026, 8:28 pm
“My Father’s Shadow” “தந்தையின் நிழலில் ஒரு பயணம்” - “தந்தையின் நிழலில் ஒரு பயணம்”

“My Father’s Shadow” “தந்தையின் நிழலில் ஒரு பயணம்” - “தந்தையின் நிழலில் ஒரு பயணம்”

நீண்ட நாளைக்குப்பின்,தன் பாசமிகு பிள்ளைகளைச் சந்திக்கும் தந்தை.இவர்களின் ஒரு நாள் பயணம்.இவ்வனுபவத்தில்,உயிரச்சம் தந்த இக்கட்டான சூழலும் உருவாகிறது.இதற்கு காரணமான நாட்டின் அரசியல் நிகழ்வுகளையும் பின்னணியில் இணைத்து எளிமையாகவும் அதே வேளையில் மிக நுட்பமாகவும் பேசுகின்ற படமே,”என் தந்தையின் நிழல்”.

நைஜீரியாவில் தொடர்ந்து ராணுவ ஆட்சி.எண் ணெய் வள அரசியலால் எங்கும் ஊழல்.இன மோதல் கள்.சில ஜனநாயக இயக்கங்களின் செயல்பாட்டால், 1993-இல் சுதந்திரமான தேர்தல் நடைபெறுகிறது.

தேர் தலில் இரண்டு ஜனநாயகக் கட்சிகள் போட்டியிடு கின்றன.தேர்தல் முடிவை நாடே உற்று நோக்கு கிறது. போட்டியிடும் இரண்டு கட்சிகளில், ஒரு கட்சியின் தீவிர ஆதரவாளர் போலரின் என்பவன். தேர்தல் முடிவுக்கு முன்னதாக,இவன் லாகோஸிலிருந்து தொலைதூரத்தில் உள்ள தனது கிராமத்திற்கு எவ்வித முன்னறிவிப்பின்றி திடீரென வருகிறான்.

நீண்ட காலம் தந்தையை பார்த்திராத போலரினின் பதின்ம வயதுடைய இரு மகன்களான ரெமி, அகின் ஆகியோ ருக்கு தந்தையின் திடீர் வருகை, ஒரு இன்ப அதிர்ச்சி. வந்தவன்,வெளியே சென்றுள்ள மனைவியைக் கூட பார்க்காமல் மீண்டும் லாகோஸ் செல்வதாக பிள்ளை களிடம் கூறுகிறான்.

இம்முறை தனது இரு மகன்களை யும் கூடவே அழைத்துச் செல்கிறான். சிறுவர்களும் உற்சாகமாகக் கிளம்புகிறார்கள். பேருந்து பயணத்தில்,போனி ராணுவ முகாமில் நடைபெற்ற தாக்குதலில் பலர் இறந்த செய்தியை தினசரி பத்திரிகைகளில் போலரின் பார்க்கிறான். வழியில் பெட் ரோல் பற்றாக்குறையால், பயணத்தில் பல சிரமங் களைச் சந்தித்து லாகோஸை அடைகிறார்கள்.

போலரின் வேலை பார்த்த கம்பெனி அவனுக்கு,ஆறு மாத சம்பளப் பாக்கித் தர வேண்டியிருந்தது.இதனைப் பெறுவதற்காக,காலையிலே அங்கு செல்கிறான்.மேனேஜர் இல்லை.இரவு ஷிப்டுக்கு தான் வருவார் என்ப தை அறிகிறான்.

மாலை வரை பொழுதைப் போக்க, தன் பிள்ளைகளோடு நகரைச் சுற்றிப் பார்க்கப் புறப்படு கிறான். சிறுவர்களின் தாயை முதலில் சந்தித்து காதலித்த இடமான தேசிய நாடக அரங்கத்தை தன் பிள்ளைக ளுக்கு காண்பிக்கிறான்.

சிறுவர்கள், நகரின் ஆயிரக் கணக்கான மக்களின் முகங்களைப் பார்த்து அதிசயிக்கிறார்கள். ஒரு மதுக்கடைக்கு அழைத்துச் செல்கிறான்.அங்கு, தன் மனைவி மீது கொண்ட அளவு கடந்த காதலின் பழைய நினைவுகளை விவரிக்கிறான். இதற்கிடையே அங்குள்ள ஒரு பணிப்பெண்ணுடன் போலரின் நெருக்க மாக நின்று தனிமையில் பேசுவதை,மூத்த மகன் ரெமி பார்க்கிறான்.

பின் கடற்கரைக்கு அழைத்துச் செல்கிறான். சகோதர பாசத்தின் மகிமையையும்,குடும்பத்தின் முக்கியத் துவம் குறித்தும்,அதனை பாதுகாக்க வேண்டிய அவசி யத்தையும் பிள்ளைகளிடம் போலரின் அறிவுறுத்து கிறான். மனைவியை மிகவும் நேசிப்பதாகவும் கூறுகி றான். இதற்கிடையே,நகரில் ரோந்து போகும் ராணுவ வீரர் களின் உணர்ச்சியற்ற அச்சுறுத்தும் முகங்களை சிறுவர் கள் பார்க்கிறார்கள்.

அவ்வப்போது,போலரின் மூக்கிலிருந்து ரத்தம் வடிவதை பார்த்து சிறுவர்கள் பரிதவிக்கின்றனர். மாலையில், மீண்டும் கம்பெனிக்கு வருகிறார்கள்.இப்போதும் மேனேஜர் வரவில்லை.போலரின் அடுத்து செய்வதறியாது கலங்குகிறான்.

இந்த நேரத்தில், தொலைக் காட்சியில் முக்கியச் செய்தி வருகிறது.போலரின் சார்ந்த கட்சி வெற்றி பெற் றாலும்,தேர்தல் முடிவை ரத்து செய்து, ராணுவ ஆட்சி தொடர்வதாகவும்,ஜெனரல் சாமி அப்பாச்சா அறிவிக் கிறார். உடன், நகரம் முழுமைக்கும் கலவரம் வெடிக் கிறது.

போலரின் தமது பிள்ளைகளை பாதுகாப்பாக அணைத்துக் கொண்டு, நகரிலிருந்து தப்பிக்கிறான். ராணுவம் இடை மறிக்கிறது. போனி முகாம் தாக்கு தலில் போலரினைப் பார்த்ததாக ஒரு ராணுவ வீரன் குற் றம் சுமத்துகிறான். பயந்து நடுங்கிய போலரின் மூக்கில் இப்போதும் ரத்தம் வடிகிறது. இதைப் பார்த்த பிற ராணுவ வீரர்கள் அனுதாபத்தில் அவனை விட்டு விடுகிறார்கள்.இதனைப் பயன்படுத்தி,தன் பிள்ளைகளோடு கிராமத் திற்கு தப்பிக்கிறான்.

அடுத்த காட்சியில், போலரின் இறந்த நிகழ்ச்சி யில் ரெமி,அகின் இவர்களோடு தாயும் கதறி அழுகிறார் கள். இறுதிச்சடங்கில் மூவரும் பங்கேற்க படம் முடிகிறது. படத்தில் போலரின் அரசியல் செயல்பாடு,அவனது தனிப்பட்ட லாகோஸ் வாழ்வு குறித்தும் விவரிக் கப்படவில்லை. அதே நேரத்தில் மனைவியைச் சந்திக்காமல் சென்றது குறித்தும் விவரணம் இல்லை.

சில விஷயங்களை மறைத்து வாழ்கிறவனாக இருந் தாலும் சிறந்த தந்தையாக திகழ்கிறான். கடற்கரையில் தந்தைக்கும் மகன்களுக்கும் உரையாடல் நடக்கிறது.

மூத்த மகனாகிய ரெமி, தந்தையிடம்,”தாய் போல் ஊரிலே வேலையைப் பார்க்காமல், எங்களிடமிருந்து விலகி, தொலை தூரத் தில் வேலை பார்த்தமைக்கான” காரணத்தை கேட்கி றான். அதற்கு தந்தை,”தனக்கும் குடும்பத்தோடு இருந்து சொந்த ஊரிலே வேலை பார்க்க விருப்பம் தான். ஆனால் நமது ஆசைப்படி நைஜீரியாவில் வாழ்வது கடினம்”,எனக்கூறுகிறான்.

இது, இந்நாட் டில் போராடினால் தான் வாழ முடியும் என்பதை எளிமையாக பிள்ளைகளிடம் விளக்குவதாக புரிந்து கொள்ள முடிகிறது. ரெமி, அகின் ஆகிய இருவரும் காகிதத்தில் மல்யுத்த வீரர்களின் படங்களை வரைந்து, தங்களை மல்யுத்த வீரர்களாக மனதில் எண்ணி விளையாடு கிறார்கள்.ரெமி நல்ல வீரர்களை வைத்துக் கொள் கிறான்.

அகினுக்கு சாதாராண வீரர்களை கொடுக் கிறான்.சாதாரண வீரர்களை வழங்கியமைக்கு அகின்,ரெமியிடம் சண்டையிடுகிறான்.

அதற்கு ரெமி,”உன் உலகத்தை நீ தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்” எனக்கூறுவது தனிமனித பொறுப்பை உணர்த்துகின்ற வாழ்வியல் பதில். நண்பனொருவன், அவனது மனைவி உயிரோடு இருக்கையில் அன்பை செலுத்தாமல் இருந்ததை தற்போது நினைத்து வருந்துவதாக போலரினிடம் பகிர் கிறான்.

அப்போது, போலரின் முகத்தை மிக நெருக் கமாக,நீண்ட நேரம் கேமரா காண்பிக்கும். இது போலரி னிடம் ஏதோ குற்ற உணர்வு இருப்பதை சூசகமாக உணர்த்தும்.

சிறப்பான ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை ஆகியவற்றின் மூலம் நம்மை, 1993 காலக்கட்ட நைஜீரி யாவிற்கு ஆச்சரியமளிக்கும் வகையில் அழைத்துச் சென்றுள்ளனர்.

போலரின், ரெமி மற்றும் அகின் பாத்திரமேற்றுள்ள முறையே ஷோப் ட்ரிஷூ, மார்வலஸ் எக்போ மற்றும் காட்வின் எக்போ ஆகியோர் எதார்த்தமான மற்றும் சிறப் பான நடிப்பைத் தந்துள்ளனர். ஒழுங்கற்ற சமூகத்தில் நிலவும் துயரங்களை எதிர் கொண்ட தந்தைகளின் அனுபவங்களை அடுத்த இளம் தலைமுறைகளும் புரிந்து கொள்வதற்கான இணைப்புப் பாலமாகவே இப்படத்தை எடுத்துள்ளதாக,பிரிட்டிஷ்-நைஜீரிய புதிய இயக்குநர் அகினோலா டேவிஸ் ஜூனியர் குறிப்பிட்டிருப்பது சரியே.

இயக்குநருக்கு இப்படம் முதல் படமானதால், 2025-ஆம் ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்படவிழாவில், ‘Camera d’Or விருதிற்கான போட்டியில் இடம்பெற்றது.

முதல் படத்திற்கான சிறந்த படமாக தேர்வு செய்யப் படாவிட்டாலும், இதன் தனித்துவத்தை கௌரவிக்கும் விதமாக “Special Mention”பிரிவில் விருது வழங்கப் பட்டுள்ளது.மேலும்”Un Certain Regard”விருது பிரிவுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.முபியில் இப்படம் உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.