தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

என் உடை என் உரிமை - கே.ஏ.ஷாஜி

13 Aug 2026, 10:23 pm
என் உடை என் உரிமை -  கே.ஏ.ஷாஜி

என் உடை என் உரிமை

‘லுங்கிவாலா’ (ஆக., 10 அன்று மாநிலங்களவையில் ஜான் பிரிட்டாஸ் உரையாற்றியபோது பாஜக எம்.பி. சுஷ்மிதா தேவ் ‘லுங்கிவாலா’ என்று கூறினார்) என்பது ஒருவகையான அவமதிப்பு என்றால், அதை ஏற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் ஒரு தென்னிந்தியன். எனக்கு லுங்கியை அணிவதற்கு அனைத்து உரிமைகளும் உண்டு, யாருடைய கலாச்சார அனுமதியும் இன்றி அதை நேசிப்பதற்கும், அதை அணிந்து கொண்டு சுற்றி வருவதற்கும் எனக்கு உரிமை உண்டு.

லுங்கிவாலா

லுங்கி என்பது பிற்போக்குத்தனத்தின் அடையாளமல்ல. அது வசதியானது, காலநிலைக்குப் பொருத்தமானது, வேலைக்கும், வீட்டுக்கும், நினைவுகளுக்கும்வசதியானது, எங்கள் தென்னிந்திய வாழ்க்கையின் ஒரு பகுதி அது. கேரளத்தில் லுங்கியுடனான எங்கள் உறவுஏறத்தாழ உணர்வுமயமானது. நாங்கள் அதை அணிந்து உண்போம், உறங்குவோம், வேலை செய்வோம், விவாதம்செய்வோம், செய்தித்தாள் படிப்போம், அரசியல் பேசுவோம்.

எங்கள் மிகச்சிறந்த அரசியல் புரட்சிகளில் சிலர் யாரோ லுங்கி அணிந்து கொண்டு தேநீர் பருகிக் கொண்டுதுவங்கியதாக இருக்கும். எனவே, ‘லுங்கிவாலா’ என்பதைச் சுற்றியுள்ள அரசியல் வெளிப்படுவதாக எனக்குத்தோன்றுகிறது. என்னைக் கவலை கொள்ள வைப்பது யாரோ அந்த உடையை விரும்பவில்லை என்பதல்ல. எதையும் வெறுக்க மக்களுக்கு உரிமை உண்டு. என்னைக் கவலைப்படுத்துவது என்னவென்றால் இந்தியர்கள்எதை உடுத்த வேண்டும், எப்படித் தோற்றமளிக்க வேண்டும், எந்தக் கலாச்சார அடையாளங்களுக்கு மரியாதை கிடைக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் பெரிய அரசியல்தான்.

உடைக்கு சான்றிதழ் தேவையில்லை

இங்குதான் பாஜகவின் நிர்ப்பந்தமான கலாச்சார சீர்மை என்ற அரசியலுக்கு சவால் விடுக்க வேண்டியுள்ளது. இந்தியா ஒருபோதும் ஒரே உடையை அணிந்ததில்லை. ஒரு தமிழனுக்கு வேட்டி அணிய உரிமை உண்டு.

ஒரு மலையாளிக்கு முண்டையோ, லுங்கியையோ அணியும் உரிமை உண்டு. ஒரு வங்காளிக்கு வேட்டியை அணியும் உரிமை உண்டு. ஒரு மணிப்புரிக்கும், அசாமியருக்கு, காஷ்மீரிக்கு, பஞ்சாபிக்குஅல்லது பழங்குடி இனத்தவருக்கு அவர்களது பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கும் உரிமை உண்டு. ஒவ்வொருவரின்மீதும் ஒரு கலாச்சார அடையாளத்தைத் திணிக்கும்போது இந்தியா பலவீனமடைகிறது, பலப்படவில்லை.

எனவே நாம் தெளிவாக இருப்போம்: ஒரு லுங்கிக்கு தில்லியின் (மோடி அரசின்) சான்றிதழ் தேவையில்லை.அது அரசர்களையும், காலனியத்தையும், சோஷலிசத்தையும், முதலாளித்துவத்தையும், பாலிவுட்டையும் (இந்திதிரையுலகம்), தொலை க்காட்சியையும், பல்வேறு விதமான அரசியல் முட்டாள்தனங்களையும் சமாளித்துள்ளது.அது பாஜகவையும் எதிர்கொண்டு பிழைக்கும்.

லுங்கி ஜனநாயக சீருடை

மேலும் லுங்கி வெப்பமண்டலத்துக்கு உகந்த அருமையான உடை. பெருமளவு காற்று செல்லும் வசதி, குறைந்ததையல், அசாதாரணமான விரிவடையும் தன்மை கொண்டது. வேலை செய்ய அதை மடித்துக் கட்டலாம்,தூங்குவதற்கு விரித்து விடலாம், சண்டை போடுவதற்கு இறுக்கிக் கட்டிக் கொள்ளலாம். உங்கள் விலை மிகுந்தகால்சட்டைகளில் அதை முயற்சி செய்யுங்கள் பார்க்கலாம்.லுங்கியானது தென்னிந்தியாவிலும், தெற்காசியாவிலும், தென்கிழக்கு ஆசியாவிலும் அணியப்பட்டாலும், கேரளத்தில் அது உணர்வுடன் கலந்தது.இங்கு லுங்கி ஏறத்தாழ ஒரு ஜனநாயக சீருடை. ஏழையோ, பணக்காரரோ, தொழிலாளியோ, அறிவுஜீவியோ,மீனவரோ அல்லது அரசியல்வாதியோ, நாங்கள் அனைவரும் ஒரே புள்ளியில்தான் நிற்கிறோம்.

எனவே, என்னை லுங்கிவாலா என்று அழையுங்கள். அதை எனக்குப் பாராட்டாக எடுத்துக் கொள்கிறேன். ஏனெனில் அடுத்த இந்தியன் எதை அணியவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் கலாச்சார போலீஸ்காரனாக இருப்பதை விட நான் ஒரு பெருமைமிக்க லுங்கிவாலாவாக இருப்பேன்.என் லுங்கி, என் காலநிலை, என் கலாச்சாரம், என் தேர்வு. எனவேஅதை எப்படி அணிவது என்பதைக் கற்றுக் கொடுக்க யாரும் தில்லியிலிருந்து கேரளத்துக்கு வர வேண்டாம். - கே.ஏ.ஷாஜி, தமிழில்: கி.ரமேஷ்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.