முந்தய பக்கம்

“என் அதிருப்தி, என் அறை”

31 Mar 2026, 4:50 pm
“என் அதிருப்தி, என் அறை”
<p><strong>&ldquo;என் அதிருப்தி, என் அறை&rdquo;</strong></p> <p>கோயம்புத்தூருக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க, விமான நிலை யத்தில் பா.ஜ.க மற்றும் கூட்ட ணிக் கட்சித் தலைவர்கள் வரி சையாகக் காத்திருந்தனர். ஆனால், அங்கே ஒரு முக்கிய முகத்தைக் காண வில்லை; அவர்தான் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை. பட்டியலில் பெயர்... ஆள் எங்கே? பிரதமரை வரவேற்கும் முக்கியப் பிரமுகர்கள் பட்டியலில் அண்ணாமலையின் பெயர் மின்னியது. ஆனால், விமானம் தரையிறங்கியபோது அவர் அங்கே இல்லை. &ldquo;பட்டியலில் பெயர் இருந்தது, ஆனால் அவர் வரவில்லை&rdquo; என வானதி சீனிவாசன் அப்பாவியாகக் கூறியிருப்பது சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது. தொகுதிப் பங்கீட்டில் தனக்கு நெருக்கமானவர்களுக்கு இடம் கிடைக்காத அதிருப்தியில் அண்ணாமலை &lsquo;ஸ்டிரைக்&rsquo; செய்கிறாரா அல்லது தில்லி மேலிடத்தின் மீது கோபமா என அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்புகின்றனர். வானதியின் நழுவல் அண்ணாமலை ஏன் வரவில்லை என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, வானதி சீனிவாசன் லாவகமாகப் பதிலளித்தார். &ldquo;அண்ணாமலை எப்போது வருகிறார் என்று நானும் கேட்டுக்கொண்டே இருந்தேன். அவர் எங்களின் &lsquo;அன்புத் தம்பி&rsquo;. பா.ஜ.க-வில் தனிநபர் ஆதரவாளர்கள் என்று யாரும் கிடையாது&rdquo; எனக் கூறி மழுப்பினார். கட்சிக்குள் நிலவும் கோஷ்டிப் பூசலை மறைக்க அவர் எடுத்த முயற்சி அப்பட்டமாகத் தெரிந்தது. எங்கே போனார் ஐ.பி.எஸ்? ஒரு காலத்தில் &ldquo;என் மண், என் மக்கள்&rdquo; என நடை பயணம் மேற்கொண்டவர், இப்போது பிரதமர் வந்த போது &ldquo;என் அதிருப்தி, என் அறை&rdquo; என முடங்கிக் கிடக்கிறாரா? &nbsp;பிரதமரின் வரவேற்பையே புறக்கணிக்கும் அளவுக்கு ஈகோ &nbsp;வளர்ந்துவிட்டதா அல்லது மேலிடம் அவரை ஓரங்கட்டி விட்டதா? &ldquo;ஒழுக்கமான கட்சி&rdquo; என மார்தட்டிக்கொள்ளும் பா.ஜ.க-வின் உட்கட்சிப் பூசல் இப்போது கோயம்புத்தூர் விமான நிலையம் வழியாகத் தெருவுக்கு வந்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram