முந்தய பக்கம்

மகளிர் கல்லூரியில் “முத்தமிழ் விழா”

3 Jan 2026, 2:20 pm
மகளிர் கல்லூரியில் “முத்தமிழ் விழா”
<p><strong>மகளிர் கல்லூரியில் &ldquo;முத்தமிழ் விழா&rdquo;</strong></p> <p>கோவை, ஜன.3- பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் தமு எகச உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து நடத்திய &ldquo;முத்தமிழ் &nbsp;விழா&rdquo;வில் மாணவிகள் பங்கேற்று கவிதை, பாட்டு மற்றும் &nbsp;பேச்சுப்போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், &nbsp;பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி தமிழ்த்துறை, &nbsp;சந்திரகாந்தி தமிழ்மன்றம் மற்றும் தமிழாய்வு அறக் கட்டளை ஆகியவை இணைந்து நடத்திய &ldquo;முத்தமிழ் விழா&rdquo; &nbsp;நிகழ்ச்சி வெள்ளியன்று கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம் மாள் கல்லூரியில் உள்ள சந்திரா கருத்தரங்கக் கூட்டத்தில் &nbsp;நடைபெற்றது. &nbsp;இந்நிகழ்வில் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி தமிழ் துறைத் தலைவர் முனைவர் இர. மணிமேகலை வரவேற் றார். தமிழாய்வு அறக்கட்டளை அறங்காவலர் சூலூர் சிவ குமார் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்க சங்க மாவட்டச் செயலாளர் அ.கரீம் சிறப்புரையாற்றினார். பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் &nbsp;கல்லூரி முதல்வர் முனைவர் பி.பி.ஆரதி வாழ்த்திப்பேசி னார். பேச்சு போட்டிக்கு தமுஎகச மாவட்டப் பொருளாளர் முனைவர் வெ.மைதிலி, கவிதைப் போட்டிக்கு மாவட்டச் செய லாளர் அ.கரீம், பாட்டுப் போட்டிக்கு வழக்கறிஞர் சு. ராஜேஷ் &nbsp;ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர். போட்டிகளில் வென்ற &nbsp;மாணவிகளுக்கு பரிசு வழங்கி சிறப்பு செய்தனர். இதில், தமுஎகச மாவட்டத் தலைவர் காளிநாதன் உள் ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர் கள் திரளாக பங்கேற்றனர். நிறைவாக சந்திரகாந்தி தமிழ் மன்றப் பொறுப்பாளர் உதவிப் பேராசிரயர் ரா.அருணா நன்றி &nbsp;கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram