கல்லூரி ஆசிரியர்கள் பணி மேம்பாட்டை உயர்த்திடுக! ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ-விடம் மூட்டா அமைப்பினர் மனு
29 May 2026, 10:59 pm
<p><strong>கல்லூரி ஆசிரியர்கள் பணி மேம்பாட்டை உயர்த்திடுக! ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ-விடம் மூட்டா அமைப்பினர் மனு</strong></p><p>நாகர்கோவில், மே.29- கல்லூரி ஆசிரியர்கள் பணி மேம்பாட்டை உயர்த்திட கோரி செல்லசுவாமி எம்எல்ஏ விடம் மூட்டா அமைப்பினர் மனு கொடுத்த னர். மூட்டா அமைப்பின் மத்திய பொருளா ளர் முனைவர் ராஜசேகரன் தலைமையில் ஆர் செல்வ சுவாமி எம் எல் ஏவுக்கு சால்வை அணிவித்து அவரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். கல்லூரி ஆசிரியர்கள் பணி மேம்பாடு கடந்த ஆறு ஆண்டுகளாக அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு வழங்கப்பட வில்லை. அதனை வழங்கிட உதவிட வேண்டும். என தெரிவித்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் மூட்டா அமைப்பின் முனைவர்கள் மத்திய இணை பொதுச் செயலாளர் சிவஞானம், துணைத் தலைவர் ராஜு, கல்வி குழு அமைப்பாளர் பொன் முருகராஜ், நான்காம் மண்டல செயலாளர் மகேஷ், மூன்றாம் மண்டல செயலாளர் லெனின், நிர்வாகிகள் சுப்பையா, அனீஸ் ஜோசப் ,வெற்றி காமிலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
