மூட்டாவின் முதல் தலைவர் பேரா. க. திருமாறன் காலமானார்
7 Jun 2026, 10:52 pm

மூட்டாவின் முதல் தலைவர் பேரா. க. திருமாறன் காலமானார்

மதுரை, ஜூன் 7: தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் கழகமான (மூட்டா - MUTA) அமைப்பின் நிறுவனரும், அதன் முதல் தலைவரும், மூத்த உறுப்பினருமான பேராசிரியர் க. திருமாறன் (102) சனிக்கிழமை சென்னை மாநகரில் காலமானார்.

அவரது மறைவுக்கு மூட்டா மாநிலத் தலைவர் க.க. பெரியசாமி ராஜா மற்றும் பொதுச் செயலாளர் அ.தி. செந்தா மரைக்கண்ணன் ஆகியோர் நெஞ்சார்ந்த வீர வணக்கம் செலுத்தி, தங்களது ஆழ மான இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மூட்டா மாநிலத் தலை வர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை யில், அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை கல்லூரி ஆசிரியர் பணியும், அதற்கான ஊதியமும் கடும் சுரண்டலுக்கு உள்ளாகி நிரந்தரமற்றதாக இருந்ததைச் சுட்டிக் காட்டியுள்ளனர்.

1970-களுக்கு முன்பு தனியார் கல்லூரி நிர்வாகங்கள் ஆசிரி யர்களை எப்போது வேண்டுமானாலும் பணிநீக்கம் செய்யும் தன்னிச்சையான அதிகாரத்தைக் கொண்டி ருந்த அவலநிலைக்கு எதிராக, ஆசிரியர்களை ஒன்றிணைத்து வலுவான அரணாக மூட்டா இயக்கத் தைக் கட்டியமைத்த பெருமை பேராசிரியர் க. திருமாறனையே சாரும். அ

ந்தப் போராட்ட இயக்கத்தின் முதல் தலைவராகப் பொறுப்பேற்று, அவர் அயராத பலவரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டங்களை முன்னின்று வழிநடத்தினார். அ

வரைப் போன்ற தலைவர்களின் இடையறாத தியாகத்தால்தான் தனி யார் கல்லூரி நிர்வாகங்களின் தன்னிச் சையான அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கும், அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கு இணையான பணிப் பாதுகாப்பு, உரிய ஊதியம், நியாய மான பணிவிதிகள் மற்றும் பெண் ஆசிரி யர்களுக்கான ஊதியத்துடன் கூடிய மகப் பேறு விடுப்பு உள்ளிட்ட பல சட்டப்பூர்வ உரி மைகள் சாத்தியமாயின.

கொள்கை உறுதியில் மலையைப் போன்ற உறுதியுடன் திகழ்ந்த பேராசிரி யர் க. திருமாறன், தொழிற்சங்க அறத்தை யும் வெளிப்படை த்தன்மையையும் உயர் வாக மதித்தவர்.

அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக, அவரது சொந்த சகோதரரான பேராசிரியர் க. அன்பழகன் தமிழகக் கல்வி அமைச்சராக இருந்த காலத்திலும் கூட, தொழிற்சங்கப் பேச்சு வார்த்தைகளுக்காகத் தனது தனிப்பட்ட உறவுகளைப் பயன்படுத்த மறுத்து, தொழிற்சங்கத்தின் கூட்டுத் தீர்மானங் களுக்கும் வெளிப்படைத்தன்மைக்கும் மட்டுமே முன்னுரிமை அளித்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிலைப்பாடு அவரது உயரிய பண்புக்கும் நேர்மைக் கும் நிலையான சான்றாகும்.

மூட்டாவின் அடித்தளமாக விளங்கிய பேராசிரியர் க. திருமாறன் அவர்களின் மறைவு ஒட்டுமொத்த ஆசிரியர் இயக்கத் திற்கும் பேரிழப்பாகும்.

அவர் போராடிப் பெற்றுத் தந்த உரிமைகளை என்றும் பாதுகாத்து நிலை நிறுத்துவதே நாம் அவருக்குச் செலுத்தும் உண்மையான வீர வணக்கம் என்று கூறியுள்ளனர்.