தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிர்ப்பு மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு மூட்டா கடும் கண்டனம்!

22 Jul 2026, 9:56 pm
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிர்ப்பு மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு மூட்டா கடும் கண்டனம்!

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிர்ப்பு மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு மூட்டா கடும் கண்டனம்!

மதுரை, ஜூலை 22: நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்ற மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய கொடும் தாக்குதலையும், கல்வியாளர் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டுள்ளதையும் மதுரை காமராசர், மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரசா, அழகப்பா, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி மற்றும் அண்ணா பல்கலைக்கழகங்கள் ஆசிரியர் சங்கம் (மூட்டா) வன்மையாகக் கண்டித்துள்ளது.

கல்வி வணிகமும் நீட் முறைகேடுகளும்

நூற்றாண்டு காலமாகப் பள்ளி மதிப்பெண்கள் அடிப்படையில் சிறப்பான முறையில் நடைபெற்று வந்த மருத்துவக் கல்விச் சேர்க்கை, தற்போது தனியார் கோச்சிங் சென்டர்களின் வணிக சூதாட்டமாக மாற்றப்பட்டுள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் பலமுறை வினாத்தாள் கசிவு ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த மே 3, 2026-இல் நடைபெற்ற தேர்விலும் கசிவு ஏற்பட்டு மறுதேர்வு நடத்தப்பட்டது. இந்த முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி மாணவர்கள் அறவழியில் போராடி வருகின்றனர். மாணவர் போராட்டமும் காவல்துறை அடக்குமுறையும் ஜூலை 20 அன்று டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி அமைதியாகப் பேரணியாகச் சென்ற நிராயுதபாணியான மாணவர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர். மேலும், 21 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்த சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக்கை மருத்துவமனை வளாகத்திலேயே சிறைவைத்துள்ள போக்கை மூட்டா கண்டிக்கிறது. இது இந்திய ஜனநாயகத்தைத் தவிடு பொடியாக்கும் சர்வாதிகாரப் போக்காகும்.

தேசிய தேர்வு முகமையை உடனடியாகக் கலைக்க வேண்டும்

போராடும் மாணவர்களுடன் கல்லூரி ஆசிரியர்கள் உறுதுணையாக நிற்போம். தேசிய தேர்வு முகமையை உடனடியாகக் கலைக்க வேண்டும் என்றும், ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் மூட்டா பொதுச் செயலாளர் அ.தி. செந்தாமரைகண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் மாண்பைக் காக்க அனைவரும் குரல் கொடுக்க முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.கிலிருந்து, ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலமாக பெண்கள் கூட்டமைப்பினர் ஊர்வலமாகப் புறப்பட்ட நிலையில் அவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி னர்.

எனினும், காவல்துறை யின் தடையை மீறி, பெண்கள் கூட்டமைப்பினர் ஆளுநர் மாளிகை நோக்கிச் செல்ல முற்பட்ட நிலையில், அவர்களை பலப்பிரயோ கம் செய்து காவல்துறை யினர் கைது செய்தனர்.

இந்தப் போராட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி. பிரமிளா, பொதுச்செய லாளர் அ. ராதிகா, பொருளாளர் ஜி. ராணி, நிர்வாகிகள் எஸ். வாலண்டினா, பி. சுகந்தி, இந்திய மாதர் தேசிய சம்மேள னத்தின் மாநிலத் தலைவர் மஞ்சுளா, தேசிய செயலாளர் ஏ.ஆர். சாந்தி, அகில இந்திய முற்போக்கு பெண்கள் சங்கத்தின் தலைவர் பிலோமினா, தமிழக பெண்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் ரமணி, இந்திய கிறிஸ்தவ பெண்கள் ஒருங்கிணைப்பாளர் ஜாக்குலின், மனிதி ஒருங்கி ணைப் பாளர் செல்வி, வசுமதி, சுயாட்சி இயக்க நிர்வாகி மேரி லில்லிபாய் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.