விளையாட்டு
4 Jan 2026, 4:05 pm

விளையாட்டு

முஸ்தாபிஷூர் ரஹ்மான் விவகாரம் இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையே நீடிக்கும் மோதல் போக்கு

ஐபிஎல் 2026 ஏலத்தில் ரூ.9.20 கோடிக்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்ட வங்கதேச வீரர் முஸ்தாபிஷூர் ரஹ்மானை, பாது காப்பு மற்றும் அரசியல் காரணங் களுக்காக விடுவிக்குமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உத்தரவிட்டது. இதனால் முஸ்தாபிஷூர் ரஹ்மான் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த வங்கதேச அரசு,”இந்தியாவில் ஒரு தனி வீரருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், டி-20 உலகக்கோப்பை விளை யாட வரும் எங்கள் முழு அணிக்கும் எப்படிப் பாதுகாப்பு இருக்கும்?. பாது காப்பு கருதி தங்களது உலகக் கோப்பை லீக் போட்டிகளை இந்தியா விலிருந்து இலங்கைக்கு மாற்ற வேண்டும்” என அந்நாட்டு விளை யாட்டு அமைச்சக ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் சர்வதேச கிரிக்கெட் வாரியத் திடம் (ஐசிசி) முறையிட வங்கதேச கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. இந்நிலையில், வங்கதேசத்தின் இந்தக் கோரிக்கை குறித்துப் பெயர் குறிப்பிட விரும்பாத பிசிசிஐ உயரதி காரி ஒருவர் கூறியதாக வெளியான தக வலில், “யாரோ ஒருவரின் விருப்பத்திற் காக சர்வதேசப் போட்டிகளின் இடங்களை நினைத்த போதெல்லாம் மாற்ற முடியாது. இது நிர்வாக ரீதி யாக ஒரு முடிவு. வங்கதேசத்தை எதிர்த்து விளையாடும் மற்ற அணி களின் நிலைமை என்னவாகும்? அவர் களுக்கான விமான டிக்கெட்டுகள், தங்குவதற்கான ஹோட்டல் அறை கள் என அனைத்தும் முன்பதிவு செய்யப் பட்டுவிட்டன. மேலும், ஒவ்வொரு நாளும் மூன்று போட்டிகள் நடைபெறு கின்றன (ஒன்று இலங்கையில், இரண்டு இந்தியாவில்). இதில் ஒரு போட்டியை மட்டும் இலங்கைக்கு மாற்றுவது என்பது ஒளிபரப்பு செய்யும் தொழில்நுட்பக் குழு விற்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் சொல்வதற்கு எளிதாக இருக்கலாம். ஆனால் நடைமுறைக்குச் சாத்தியமே இல்லை” என்று அவர் கூறியதாக விளையாட்டு ஊடகங்கள் மூலம் செய்திகள் வெளியாகியுள்ளன. வங்கதேசத்தின் லீக் ஆட்டங்கள் பிப்., 7 : மேற்கு இந்தியத் தீவுகல் (கொல்கத்தா) பிப்., 9 : இத்தாலி (கொல்கத்தா) பிப்., 14 : இங்கிலாந்து (கொல்கத்தா) பிப்., 17 : நேபாளம் (மும்பை) உலகக்கோப்பை தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், பிசிசிஐயின் இந்தத் திட்டவட்டமான பதில் மூலம் வங்க தேசத்தின் இடமாற்றக் கோரிக்கை நிறைவேறுவது மிகக் கடினம் என்றே தெரிகிறது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஐசிசி இன்னும் எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஷஸ் கடைசி டெஸ்ட் போட்டி இங்கிலாந்து அணி நிதான ஆட்டம்

ஆஸ்திரேலியாவின் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிறன்று ஆஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்து முதலில் கள மிறங்கியது. இங்கிலாந்து அணி யின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன் களில் ஆட்டமிழந்தனர். பென் டக்கெட் (27), கிராவ்லி (16) மற்றும் ஜேக்கப் பெத்தெல் (10) ஆகியோரை ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சா ளர்கள் விரைவாக வெளியேற்றினர். இதனால் இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 57 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் அனுபவ வீரர்கள் ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகிய இரு வரும் இணைந்து இங்கிலாந்து அணி யை சரிவிலிருந்து மீட்டனர். இந்த ஜோடி நான்காவது விக்கெட்டிற்கு 154 ரன்கள் சேர்த்தது. மோசமான வானிலை மற்றும் மழை காரணமாக தேநீர் இடைவேளைக்கு சற்று முன்பே ஆட்டம் நிறுத்தப்பட்டது. முதல்நாளில் மொத்தம் 45 ஓவர் கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் (72 ரன்கள்), ஹாரி ப்ரூக் (78 ரன்கள்) ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட் மற்றும் மைக்கேல் நேசர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். திங்களன்று தொடர்ந்து 2ஆவது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.