சிவகிரி கோவில் குடமுழுக்கு விழாவிற்கு சீர்வரிசை அளித்த இஸ்லாமியர்கள்
24 Jun 2026, 11:38 pm
<p><strong>சிவகிரி கோவில் குடமுழுக்கு விழாவிற்கு சீர்வரிசை அளித்த இஸ்லாமியர்கள்</strong></p><p>தென்காசி, ஜூன் 24 - தென்காசி மாவட்டம் சிவகிரியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீகூடாறப்பாறை பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மகா குடமுழுக்கு விழாவை முன்னிட்டு ஜாமியா ஜூம்ஆ பள்ளிவாசல் சார்பாக சீர்வரிசை அளிக்கப்பட்டது. சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சியில் ஜமாத் தலைவர் அப்துல் கரீம், செயலாளர் மைதீன் பாட்ஷா, பொருளாளர் செய்யது யாகூப் (சொக்கல்) உட்பட ஜமாத் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வு பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.</p>
