தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அலிகார் நகரில் “ஐ லவ் முகமது” மூலம் வன்முறையை தூண்டியது முஸ்லிம்கள் அல்ல! உறுதிப்படுத்தியது உ.பி. காவல்துறை; 5 இந்துத்துவா குண்டர்கள் கைது

24 Nov 2025, 2:46 pm
அலிகார் நகரில்  “ஐ லவ் முகமது” மூலம் வன்முறையை தூண்டியது முஸ்லிம்கள் அல்ல! உறுதிப்படுத்தியது உ.பி. காவல்துறை; 5 இந்துத்துவா குண்டர்கள் கைது
<p><strong>அலிகார் நகரில் &nbsp;&ldquo;ஐ லவ் முகமது&rdquo; மூலம்வன்முறையை தூண்டியது முஸ்லிம்கள் அல்ல! உறுதிப்படுத்தியது உ.பி. காவல்துறை; 5 இந்துத்துவா குண்டர்கள் கைது</strong></p> <p>பாட்னா பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அலிகார் நகரில் உள்ள 4 இந்து கோவில் சுவர் களில், கடந்த அக்டோபர் 25 அன்று &ldquo;ஐ லவ் முகமது &rdquo; என்று &nbsp;எழுதப்பட்டு இருந்தது. இதனைத் &nbsp;தொடர்ந்து அப்பகுதி முழுக்க பெரும் கலவரம் மூண்டது. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துத்துவா ஆதரவு அமைப்புகள், இச்செயலைக் கண்டித்து போராட்டம் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டன. இதற்குக் காரணமான முஸ் லிம்களைக் கைது செய்ய வேண்டும் என சில இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இத னைத் தொடர்ந்து, முதல் கட்ட விசாரணை மேற்கொண்ட காவல்துறை, அப்பகுதியில் இமாம் மவ்லவி முஸ்தக்கீம், குல் &nbsp;முஹம்மது, சுலைமான், அல்லா பக்&zwnj;ஷ், ஹஸன், ஹமீத், சோனு, &nbsp;யூஸுப் உள்ளிட்ட 8 முஸ்லிம் களை கைது செய்து சிறையில் அடைத்தது. இதனால், சங் பரி வாரங்கள் வன்முறையைக் கை விட்டனர். காட்டிக் கொடுத்த பிழை ஆனால், அலிகாரின் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் (SSP) நீரஜ் குமார் ஜேடனுக்கு, இக்கைது தொடர்பான நெரு டல் தொடர்ந்தது. தொடர் விசார ணையை முடுக்கி விட்டார். கோவில் சுவர்களில், முஹம்மது என்பது ஆங்கிலத்தில் &ldquo;MUHMAD&rdquo; &nbsp;என தவறாக எழுதப்பட்டி ருந்ததே காரணம். பொது வாக முஸ்லிம்கள் தமது பதாகை களில் சரியான ஸ்பெல்லிங் கொண்டு எழுதுவது வழக்கம். கைது செய்யப்பட்டவர்களும் சரி யான ஸ்பெல்லிங் எழுதக் கூடி யவர்கள் என்பதை உறுதிப் படுத்தினார் நீரஜ். தொடர் விசா ரணையில், பல்வேறு சாட்சிகள் மற்றும் கோவில்கள் இருக்கும் பகுதியில் உள்ள சிசிடிவி கேம ராக்களை ஆய்வு செய்து பார்த்த &nbsp;காவல்துறையினர் அதிர்ந்தனர். அதைத் தொடர்ந்து &ldquo;ஐ லவ் முஹம்மத்&rdquo; என பல்வேறு கோவில்களின் சுவர்களில் எழுதி &nbsp;விட்டு பெரும் மதக்கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்ட சங் பரி வாரங்களைச் சேர்ந்த 5 இந்துக் கள் சிக்கினர். அவர்கள் அபி ஷேக் சரஸ்வத், ஆகாஷ் சரஸ் &nbsp;வத், திலீப் குமார் சர்மா, ஜிஷா ந்த் குமார் சிங், ராகுல் (தலை மறைவாகி உள்ளார்) ஆவர். வலு வான ஆதாரங்களுடன் உண் &nbsp;மைக் குற்றவாளிகள் பிடிபட்ட தால், முன்னர் கைதான 8 முஸ் &nbsp;லிம்கள் விடுவிக்கப்பட்டுள்ள னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.