தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

முதுமையில் மறதியை தடுக்க உதவும் இசை

23 May 2026, 11:56 pm
முதுமையில் மறதியை தடுக்க உதவும் இசை

முதுமையில் மறதியை தடுக்க உதவும் இசை

ஓர் இசைக்கருவியை இசைத்தல் அல்லது குழுவாக பாடும் நிகழ்வில் இணைந்து பாடுதல் முதுமையில் நினைவாற்றல் மற்றும் சிந்திக்கும் திறனை மேம்படுத்தும்.

குறிப்பாக பியானோ இசைக்கருவியை இசைத்தல் நாற்பது வயதிற்கும் மேற்பட்டவர்களில் மூளை செயல்முறைகளுடன் அதிகத் தொடர்பு உடையது என்று எக்சிட்டர் (Exeter) பல்கலைக்கழக ஆய்வு கூறுகிறது.

மூளையின் ஆரோக்கியம் மேம்பட உதவும் இசை இந்த ஆய்வில் விஞ்ஞானிகள் வயது வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் இசை அனுபவங்கள் மற்றும் மூளைச் செயல்முறை களில் முக்கியப்பங்கு வகிக்கும், நிர்வாகச் செயல்பாடு என்று அழைக்கப்படும் திட்டமிடு தல், கவனக் குவிப்பு, நினைவாற்றல், பல விஷயங்களை ஒரே நேரத்தில் செய்யும் திறன் போன்ற மூளை ஆரோக்கியத்துடன் தொடர் புள்ள அம்சங்களை பரிசோதித்தனர். இசைக்கருவியை இசைப்பவர்கள் இப்பரி சோதனைகளில் அதிக வெற்றி பெற்றனர்.

பாடு வதும் மேம்பட்ட மூளை ஆரோக்கியத் திற்கு நல்லது. என்றாலும் சமூக அம்சங் களும் மூளையின் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குழந்தைப் பருவத்தில் ஓர் இசைக்கருவியை இசைக்கும் பழக்கம் உள்ளவர்கள் வயதாகும்போது கூர்மை யான அறிவுத்திறனுடன் உள்ளனர் என்று மற்றொரு ஆய்வு கூறுகிறது.

“மூளை ஆரோக்கியத்திற்கும் இசைக் கும் இடையில் இருக்கும் தொடர்பு பற்றி பல ஆய்வுகள் முன்பே நடந்துள்ளன.

ஆனால் இந்த புதிய ஆய்வு அறிவாற்றல் செயல்திற னுக்கும் முதியவர்களின் இசைப் பழக்கத் திற்கும் இடையில் இருக்கும் சிறப்புத் தொடர் பைக் கூறுகிறது. இசையில் நாட்டம் உள்ள வர்கள் புதிய சூழலுக்கு ஏற்ப தகவமைத்தல், நிகழ்வுகளுக்கு நெகிழ்வுத்தன்மையுடன் பதில் அளித்தல் போன்ற மூளையின் ஆற் றல் (brain’s agility) மற்றும் பாதகமான சூழலை வெற்றிகரமாக சமாளிக்கும் திறனைப் பெற்றுள்ளனர். இசையில் ஆர்வமுள்ளவர்களில் முதுமை மற்றும் நோய்வாய்ப்படும் தன்மை இருந் தாலும் அவர்களின் மூளை மற்றும் மனம் சேதங்களை தடுத்து செயல்களைத் தொடர்ந்து செய்யும் திறனை பெற்றுள்ளது.

இது அறிவாற்றல் சேகரம் (cognitive reserve) என்று அழைக்கப்படுகிறது. இது குறித்த ஆய்வுகள் மேலும் நடத்தப் படவேண்டும் என்றாலும் இசைக் கல்வியை ஊக்குவிப்பது பொது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இசைக் கல்வி பாதுகாப்பான வாழ்க்கைமுறை மாற்றத்தை ஊக்குவிக்கும். இது முதியவர்களை வயதாகும்போது இசையின் பக்கம் திரும்ப உதவும்.

டிமென் சியா உள்ளவர்கள் குழு நிலை இசைச் செயல் களால் அதிகப் பயனடைகின்றனர். இதனால் முதியவர்களின் ஆரோக்கியத்திற்கான திட்டம் மற்றும் செயல்பாடுகளில் இந்த அணுகு முறை சேர்க்கப்படவேண்டும். டிமென்சியா ஆபத்தை செயல் ஊக்கத்துடன் குறைக்க இசை உதவும்” என்று எக்சிட்டர் பல்கலைக் கழக டிமென்சியா ஆய்வுப் பிரிவு பேராசிரியர் ஆன் கார்பெட் (Anne Corbett) கூறுகிறார். இசைக் குறியீடு தாளைப் பரிசளியுங்கள் “இந்த ஆய்வு முடிவுகள் நேர்மறை யானவை.

இசையைக் கேட்பது மற்றும் இசைப்பதால் டிமென்சியா பாதிப்பு உள்ளவர் களில் ஏற்படும் பயன்கள் குறித்து நடந்த முந்தைய ஆய்வு முடிவுகளை இது எதிரொ லிக்கிறது. டிமென்சியாவுடன் வாழ்பவர் களுக்கு இசை மதிப்புமிக்க ஒரு சமூகத் தொடர்பு.

பிற்கால வாழ்வில் டிமென்சியா நோயாளிகள் இசை கேட்க இது உதவும். இதனால் குழுவுடன் சேர்ந்து பாடும் அல்லது இசைக் கருவியை இசைக்கும் டிமென்சியா நோயாளியின் ஆற்றல் அவர் மற்ற திறன்கள், தகவல் தொடர்புகளை இழக்கும்போதும் வாழ்வின் பிற்காலத்திலும் தொடரும்” என்று டிமென்சியா யு கே அட்மிரல் நர்ஸ் டெவலெப் மெண்ட் (admiral nurse development) அமைப்பின் ஓர் இணை இயக்குநர் கரோ லின் ஸ்கேட்ஸ் (Caroline Scates) கூறுகி றார்.

இசை கேட்பதை, பாடுவது அல்லது இசைக் கருவியை இசைப்பதில் முன்பும் இப்போதும் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ள டிமென்சியா பாதிப்புள்ளவரை உங்களுக்கு தெரிந்தால் அவர் தொடர்ந்தும் இசைப்பதை ஊக்கப்படுத்துங்கள். இசைக்குறியீடுகள் எழுதப்பட்ட தாளை அவருக்கு பரிசளி யுங்கள். அதை வாசிப்பதை, பயன்படுத்தி இசைக் கருவியை இசைப்பதை ஊக்கப்படுத் துங்கள்.

அது அவருடைய வாழ்வில் பயனுள்ள மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.