தீக்கதிர் முக்கிய செய்திகள்
17 Jan 2026, 2:42 pm

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்

படைப்புத்திறன் இல்லாதவர்கள் முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தில் இருப்பதாலும் மதரீதியான காரணங்களாலும் கூட எனக்கு வந்த சில பட வாய்ப்புகள், கைமாற்றப்பட்டிருக்கின்றன.”

ஊடகவியலாளர் கிருஷ்ண காந்த்

இந்தியாவின் வெளியுறவு கொள்கையை அமெரிக்கா தீர்மானித்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா மிரட்டியதும், ரஷ்யாவில் இருந்தும், ஈரானிடம் இருந்தும் எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது பாஜக அரசு. பாஜக தலைவர்களின் ‘கட்டிப்புடி’ வெளியுறவு கொள்கை, நாட்டை அடிமைத்தனத்துக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது.

பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்

மணிப்பூர் கலவரம் தொடங்கி, காற்று மாசுபாடு, கழிவு கலந்த குடி நீர், கூட்ட நெரிசல் பலி, சுற்றுச்சூழல் பேரழிவுகள், சரிந்து வரும் ரூபாய் மதிப்பு என கடந்த 11 ஆண்டுகால மோடியின் பதவிக்காலம் ஒரு பேரழிவாகவே இருந்துள்ளது . இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. நிர்வாகம் ஏன் முக்கியம் என்பது இதிலிருந்து தெரிகிறது.

காங். மூத்த தலைவர் பவன் கேரா

பதினாறு இந்திய மாலுமிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக ஈரான் சிறையில் உள்ளனர். இந்திய அரசாங்கத்தின் சட்ட உதவியின்றி தவித்து வருகின்றனர். குடும்பத்தினரின் தொடர் வேண்டுகோள்களுக்குப் பிறகும், வெளியுறவு அமைச்சகத்தின் அதிர்ச்சியூட்டும் அலட்சியத்தை தில்லி உயர் நீதிமன்றம் தலையிட வேண்டியிருந்த சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.